பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

பட்டன் மகன் மலைகின்றான் பெருமாள் கோவில் பூசை செய்பவன்.ஏகாங்கி பேரம்பல ஐயன் என்பவர் திரு வேங்கடநாதன் திருந்தவனத்தை மேற்பார்த்தவர். கோவிலில் இயற்பா (நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் ஒரு பகுதி) ஒதப்பட்டது.* சதாசிவராயர் காலம் (கி. பி. 1542-1565)

விஜயநகர ஆட்சியில் தொண்டை மண்டலம் தெலுங்கர்க்கு இடம் தந்ததென்பதை முன்னர்க் குறித் தோம் அல்லவா? திருப்பதியின் சிறப்பு வடக்கே மிகுதி யாக அறியப்படவே, தெலுங்கரும் அரசாங்க உத்யோ கஸ்தராக இருந்த தெலுங்கப் பெருமக்களும் சிற்றரசரும் திருப்பதியில் திருப்பணிகள் பல செய்யலாயினர். இது சதாசிவ ராயர் ஆட்சியில் மிகுதிப்பட்டது என்பதை அவர் காலக் கல்வெட்டுகளைக் கொண்டு நன்கு அறிய லாம். அக் கல்வெட்டுகளில் பழைய தமிழகத்துக் கோட்டங்கள், நாடுகள், ஊர்கள் இவற்றின் பெயர்கள் முன்போலப் பழையனவாகவே இருக்கின்றன. கோவில் தொடர்பான பழைய பெயர்களும் அப்படியே காண் கின்றன. கோவில் ஆட்சியும் மடங்களின் ஆட்சியும் ந்ேதவனங்கள் முதலியவற்றின் பாதுகாப்பும் முன் போலத் தமிழ் மக்கள் இடமே இருந்துவந்தன.

சதாசிவராயர் காலக் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழ்நாட்டு - ஊர் - மக்கள் - பிற கட்டடங்கள் - பொருள்கள் இவற்றின் தமிழ்ப் பெயர்களிற் சில இங்குக்

, Ꮡfr ᏮöᎢ &Ꭶ ;

1. திருமலைக் கோவில் கணக்கன் பெயர் தேவர் வணங்க வருவார் வேங்கடத்து அரசு என்பது............

15, 46, 110, 112, 127, 134, 138, 156, 175,