பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஆர் என்னும் பழைய தமிழ்ப் பெயர்கள் அழியாமல் சதாசிவராயர் காலம்வரை இருந்து வந்தமை அறிய லாம.

5. ஜயங்கொண்ட சோழ மண்டலத் து (தொண் டைகாட்டு படைவீடு ராச்சியத்து பல்குன்றக் கோட் டத்து - இராஜகம்பீர ராச்சியத்து - கண்ட கோபாலன் பற்றைச் சேர்ந்த தச்சூர் நாட்டுத் தச்சூர் வருவாயில் 80 ரேகை போன் தானமாக்கப்பட்டது .:

6. திருப்பதியைச் சுற்றியுள்ள 16 நாட்டுப்பிரிவு கள் குறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்று. அப்பிரிவு கள் தொண்டைமண்டலப் பிரிவுகளே ஆகும் ; இரண் டொன்.று புறம்பானவை.” சதாசிவராயர்க்குப் பின்னர் (கி. பி. 1565-1680).

சதாசிவராயர்க்குப் பின்வந்த அரசர்கள் கோல் கொண்டா, பிஜப்பூர்ச் சுல்தான்களால் தாக்குண்டு துன் புற்றார்கள். விஜயநகரப் பேரரசு பல பகுதிகளாகப் பிரிந்தது. எனினும் பெயரளவில் பேரரசு ஏறத்தாழக் .கி. பி. 1680 வரை இருந்து வந்தது. அப்பொழுது வேங் கடத்துக்கும் துங்கபத்திரைக்கும் கி ரு ஷ்னே க்கு ம் இடைப்பட்ட பகுதியை ஆண்டுவந்த பொத்தப்பிச் சோழர், உறையூர்ச் சோழர், தேவசோழர் என்ற சோழ மரபைச் சேர்ந்த (ஆனல் தெலுங்கராக மாறிவிட்ட) மரபினர் வேங்கடம், காளத்தி என்ற இடங்களில் செல்வாக்குப் பெற்றனர். விஜயநகர அழிவுக்குப் பிறகு தெலுங்கரும் கருநாடகரும் பலராகப் பாதுகாப்பு நோக்கித் தொண்டை நாட்டிற் குடியேறினர். விஜய க அரசர் பெனு கொண்டா, சந்திரகிரி இவற்றில் இருந்து அரசாளத்

5. 138. fl. 154, -