பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மகன் கோட்டக்கார நாராயணயன் எனப்பட்டான். இரண்டிடங்களில் கோட்டக்காரன்’ என்னும் தமிழ்ச் சொல் வருதல் காண்க; பொருள்களை - கிலங்களை மதிப் பிடும் உத்யோகஸ்தன் என்பது பொருள்.” .

ஏறத்தாழக் கி. பி. 1680-உடன் விஜயநகர ஆட்சி மறைக்தொழிந்தது. அதுகாறும் தமிழகத்தின் வட. எல்லையில் உள்ள திருப்பதி - தமிழ் காட்டுப் பகுதியாக வும் தமிழ் ஊராகவும் தமிழர் வாழ்விடமாகவும் தமிழ் ஆசாரியர் ஆட்சிக்கு உட்பட்ட கோவிலைக் கொண்டதாக வும் - நடைமுறை வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட நிலையிலும் இருந்துவந்தது என்னும் உண்மையை இதுகாறும் உணர்த்திய கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு நன்கு. உணரலாம்.

இலக்கியச் சான்று -

(1) விஜயநகர ஆட்சிக்காலப் பிற்பகுதியில் வாழ்ந்த பிள் ளைப்பெருமாள் ஐயங்கார் என்ற வைணவப் பெரும் புலவர், * ஆழ்வார்கள் செந்தமிழை ஆதரித்த வேங்கடம்என் தாழ்வான புன்சொல்லும தாங்குமால் :-ஏழ்பாரும் வெல்லும் கதிர்மணியும் வெம்பாலும் செஞ்சாந்தும் புல்லும் பொறுத்தமையே போல்.” என்று பாடி யிருத்தல் கவனிக்கத் தக்கது. இஃது. அவர் காலத்திலும் வேங்கடம் தமிழகத்தது என்பதை யும் தமிழ்ப் பாக்கள் எற்கத் தக்க இடம் என்பதையும் கன்கு புலப்படுத்துகின்றது அன்றாே ?

(2) இந்த விஜயநகர ஆட்சியின் பிற்பகுதியில் மது ரையை ஆண்ட திருமலே காயக்கர் காலத்து (கி. பி. 1628-1659) வாழ்ந்த படிக்காசுப்புலவர், -

3, 20.