பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

செங்கற்பட்டு, தென்னுர்க்காடு என்னும் ஜில்லாக்களாகக் காட்சி அளிக்கிறது. வட ஆர்க்காடு, செங்கற்பட்டு, சித்துார் ஜில்லாக்களும் நெல்லூர், தென் ஆர்க்காடு ஜில் லாக்களில் சில பகுதிகளும் சேர்ந்த நிலப் பகுதியே பழைய தோண்டைநாடு ஆகும்.

சங்க காலம் முதல் விஜயநகர ஆட்சிக்காலம் முடிய உள்ள இலக்கிய - கல்வெட்டுச் சான்றுகளை நோக்க, வேங்கடம் தமிழகத்தது என்பதும், தமிழர் வாழ்ந்த பதி என்பதும், தமிழ் வைணவ ஆசாரியர் ஆதிக்கம் பெற் றிருந்த ஸ்தலம் என்பதும், பிற்காலச் சோழ - விஜயநகர ஆட்சிக் காலங்களிற்றான் தெலுங்கர் தெற்கு நோக்கிக் குடியேறத் தொடங்கியதும் தெலுங்கர் கவனத்தைத் திருப்பதி இழுத்தது என்பதும், விஜயநகர வரலாற்று இறுதிக்காலம வரை வேங்கடம் தமிழ் நாட்டினது என்றே அக்கால மக்களால் கருதப்பட்டு வந்தது என்ப தாம் ஐயமற அறிந்து கொள்ளலாம்.

‘திருமலை, திருப்பதி, திருச்சானூர் முதலிய மூன்று பெருங் தலங்களிலும் கி. பி. 9-ஆம் நூற்றாண்டு தொடங்கிப் பத்த்ொன்பதாம் நூற்றாண்டு வரை அகப் பட்டுள்ள கல்வெட்டுகள் 1060 என்றும், அவற்றில் 50-ல் குறைகதவை தெலுங்கிலும் கன்னடத்திலும் சம்ஸ்கிரு தத்திலும் உள்ளன என்னும் அவை தாமும் அங்குள்ள தமிழ்க் கல்வெட்டுகளின் பிரதிகளேயாம் என்பதும் அச் சிலாசாஸ்ன வெளியீட்டடால் அறியலாம். விஜயகா மன்னர்கள் வேற்று மொழியாளராய்த் தமிழ்நாட்டின் பகுதியை ஆண்ட காலத்திலும் அவர் தெலுங்கு மொழிக் கல்வெட்டுகள் இன்றித் தமிழ் மொழியிலேயே கல் வெட்டுகள் உள்ளன என்றால், அவர்கள் காலத்தில் தெலுங்கு மக்கள் இங்காட்டுள் பலராக வாழவில்லை என்பது தெளிவான செய்தி அல்லவா ‘*

  • T. P. Palanıappa Pillai’s article, Lokopakari, pp.--

20–21. (dated 10-1-48).