பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


85

திருமங்கை யாழ்வாரும் இத்தலத்தைப் பாடியிருக்கின் தனர். கி. பி. 8-ஆம் நூற்றாரண்டிற்கு முன்னரே இத் தலத்துக் கோவில் சிறப்புற்றிருந்தது என்பது பல்லவர் (தந்திவர்மன்) காலத்துக் கல்வெட்டினல் அறியலாம்.” இத்தலம் வாலாச் சிறப்புற்று வந்தது. அக்காலத்து அல்லிக் குளம் இக்காலத்தில் புதிய கட்டடங்களைக் கொண்ட இடமாக மாறிவிட்டது.

பிற இடங்கள்

நுங்கம்பாக்கம், எழுமூர் இவ்விரண்டும் கி. பி. 11-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. துங் கம்பாக்கம் பழைய சிவன் கோவிலும் எழுமூர் தெளி சிங்க நாயனர் கோவிலும் பழையவை. தங்கசாலேத் தெரு முனையில் ஒரு கோவில் இருக்கது. அதனில் பார்த்தி வேந்திர கரிகாலன் என்ற சோழன் காலத்துக் (கி. பி. 10-ஆம் நாற்றாண்டு) கல்வெட்டு இருந்தது. அதன் உடைந்த பகுதி சென்னைப் பொருட் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. புழல் கோட்டத்தில் எழுமூர் காடு என்பது பெரியது. அதன் தலை காம் எழுமூர். சேற்றுப் பட்டு எழுமூர் நாட்டைச் சேர்ந்தது". மாம் பலம் என்பது சைதாப் பேட்டை வரை பரவியிருக்த கிராமம் ஆகும்.’ பி ர ம் பூர், அயனபுரம்’ ஆகிய இாண்டும் கி. பி. 17-ஆம் நூற்றண்டு வடமொழி தாலிற் குறிக்கப்பட்டுள்ளன.” வில்லிவாக்கம் பழைய காலத்தில் வில்லி பாக்கம்’ எனப்பட்டது. அது புழல்

7. Epigraphia Indica, Vol. 8, p. 291. 8. Madras T. C. Volume, p. 365. 9, Ibid, p. 136. 10, Ibid, p. 124, 11. 3418) wirth. . 12. Ibid, p. 109,