பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் இ குக் லேத்தின் பழமையைக் குறிக் கின்றன.

விஜயநகர ஆட்சி

விஜயநகர ஆட்சியிமதிக் காலத்தில் காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு கர்நாடக நாட்டை விஜயநகரச் சார்பில் சிற்றரசர் ஒருவர் ஆண்டுவந்தார். அவர் மரபில் வந்து, கி. பி. 1639-ல் சென்னையில் வாணிகத்திற்காக வெள்ளேயர்க்கு இடம் தந்தவர் தாமல் (தாமர்ல) வேங்கடப்ப நாயக்கர் என்ப வர். அவரது பிரதிநிதியாக அவருக்கு அடங்கிய பாளை பப்பட்டுக்காரர் ஒருவர் பூவிருந்தவல்லியில் இருந்தார். அவரே சென்னையை மேற்பார்த்து வந்தார்.?? சோழப் போசு வீழ்ச்சி யடைந்த பிறகு தொண்டைநாடு கி. பி. 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சிக்கு உட்பட்டது; அது மு த ல் கி. பி. 17-ஆம் நாற் முண்டுவரை அவர்களிடமே இருந்தது. இது வரலாறு கூறும் உண்மை. அஃதாவது, சென்னை ஏறத்தாழ 800 வருடகாலம் விஜயநகர ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்னலாம்; அதன் பிறகு கர்நாடக நவாப் ஆட்சிக்கும் பிறகு வெள்ளேயர் ஆட்சிக்கும் மாறிவிட்டது. ஆயின், சென்ன்ையை உள்ளிட்ட தொண்டைகாடு வரலாற்றுக் காலம் தொடங்கிக் கி. பி. 1800 வரை தமிழர் ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டுப் பகுதி என்பதை மறந்துவிடலாகாது.

20, M. T. C. Volume, pp. 89,42,