உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

“விடடா துலுக்கா !” என்னும் ஏவலும், “விடமாட்டேன் மலுக்கா” என்னும் மறுப்பும், ஒருமை குறித்தனவேனும், கைகோத்து நிற்பவர் இருவரும் ஒருங்கே ஏவப்படுவதும் ஒருங்கே மறுத்துரைப்பதுமே மரபாம்.

ஆட்டுத் தோற்றம் : —அரண்மனைப் பூந்தோட்டத்திற்குக் காவலாயிருந்த ஒரு மகமதியன், தன் காவல் தோட்டத்தில் பூப்பறித்ததொரு பிள்ளையைப் பிடித்துக்கொண்டு, அவள் பெற்றோர் எவ்வளவு பணந்தந்தும் ஏற்காமல் கடைசியில் புலவு அல்லது கறிச்சோறு தருவதாகச் சொன்னவுடன், அப்பிள்ளையை விட்டுவிட்ட செய்தியை,, நடித்துக் காட்டுவதுபோல் உள்ளது இவ்விளையாட்டு.