96
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
[இருபாற்
ஆட்டை முடிந்தபின், வெற்றியும் தோல்வியுமின்றி இருவரும் சமமாகக் கற்கள் வைத்திருப்பின், அடுத்த ஆட்டையில் 'சரிபாண்டி'ஆடல் வேண்டும். முதலாவது அவ்வைந்தாகவும் பின்பு பப்பத்தாகவும் கற்களையெடுத்து, அத்தனையே போட்டு ஆடுவது, சரிபாண்டி யாடலாகும். இதில் விரைந்து விளைவு காணலாம்.
II. கட்டுக் கட்டல்
ஆட்டின் பெயர் : நான்கு மூலைக்குங் கட்டுக்கட்டி ஆடும் பண்ணாங்குழி விளையாட்டுவகை, கட்டுக்கட்டல் எனப்படும்.
ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி : இரு சமவரிசையாகவுள்ள பதினான்கு குழிகளும், குழிக்கைந்தாக அவற்றிற்கு வேண்டிய கற்களும், இதற்குரிய கருவிகளாம்.
ஆடு முறை: ஆடகர் ஒவ்வொருவரும் தத்தம் வரிசையின் இடக்கோடி (அதாவது இடப்புறக் கடைசி)க் குழியினின்று தொடங்கி ஆடல்வேண்டும். எடுத்த கற்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டபின், கடைசியாகப் போட்ட குழியினின்றே கற்களையெடுத்து ஆடல் வேண்டும். கடைசியாகப் போட்ட குழியில் ஏற்கெனவே ஒரு கல்லேனும் இருந்தால்தான், அதினின்று எடுக்க முடியும்; இல்லாவிட்டால் (அதாவது போட்டபின் ஒரு கல்லேயிருந்தால்) எடுக்க முடியாது. வெறுங்குழியைத் துடைத்து அடுத்த குழியிலிருந்தேனும், பிற வகையிலேனும், கற்களை எடுத்து வைத்துக்கொள்ளுதல் இவ்விளையாட்டில் இல்லை. ஒரு மூலைக்குழியில் ஏற்கெனவே மூன்று கல்லிருப்பின், நாலாவது கல்லைப் போடும்போது, அதைக் குழிக்குள் போடாமல் குழிக்குப் பக்கமாக வைத்துவிட வேண்டும். இதுவே ‘கட்டுக்கட்டல்’ எனப்படுவது. கட்டுக்கட்டிய குழியில், கட்டினவரே மேற்கொண்டு கல்போட முடியும்; அடுத்தவர் போடமுடியாது. இங்ஙனம்