இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
வெறுங்குழி அமைவதும், அதைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக்கொள்வதும், இவ்விளையாட்டில் இல்லை.
மேற்சொன்னவாறு (அதாவது என்றும் ஒரு வரிசையிலுள்ள பெருந்தொகைக் குழியினின்றே காயெடுத்து) ஒன்பது முறை தொடர்ந்து ஆடின். ஆட்டந் தொடங்குமுன் போட்டிருந்தவாறே, அவ்வக் குழிகளிற் காய்கள் அமைந்துவிடும். அங்ஙனம் இராவிடின் ஆடினது தவறென்று அறிந்துகொள்ளலாம்.
ஒருவர் தமித்தாடுதற்கேற்ற விருப்பத்தை இவ்விளையாட்டு உண்டுபண்ண வல்லது.
குறிப்பு : —பண்ணாங்குழி பெண்பிள்ளைகட்கே ஏற்ற தாயினும், பையன்களாலும் ஆடப்படுவது பற்றி இருபாற் பகுதியிற் கூறப்பட்டதென்க.