உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

[இருபாற்

தள்ளப்பட்ட வட்டு, அரங்கின் முதற்கட்டத்திலிருந்து ஒரே யெட்டில் மிதிக்கமுடியாதவாறு எட்டத்திலிருப்பவன், ஆடகர் தாம் வைத்த உப்புவழியாக நடந்தேனும் நொண்டியடித்தேனும் சென்று மிதிக்கலாம். இது உப்பு வைத்தவருக்கும் ஏற்படும் வசதி. இவ் வசதி உப்பு மிகுதிக்குத் தக்கவாறு மிகும்.

ஆட்டுத் தோற்றம் : ஒருகால், இவ்விளையாட்டு, ஒரு நொண்டி வணிகன் பலநாடு கடந்து அரும்பொருள் தேடி வந்ததைக் குறித்ததாக இருக்கலாம்.

ஆட்டின் பயன் : ஒற்றைக்காற் செலவு, குறித்த இடத்திற்கு ஒரு பொருளை எறிதல், காலால் பொருளைக் குறித்த இடத்திற்குத் தள்ளுதல். பின்புறமாகக் குறித்த இடத்திற்கு ஒன்றை யெறிதல் முதலிய பயிற்சிகள் இவ்விளையாட்டின் பயனாம்.


(௨) சோழ கொங்கு நாட்டுமுறை
1. ஒற்றைச் சில்லி

ஆட்டின் பெயர் : பாண்டிநாட்டிற் பாண்டியென வழங்கும் வளையாட்டு, சோழ கொங்கு நாடுகளிற் சில்லி என்றும் சில்லாக்கு என்றும், பெயர் பெறும். ஒற்றைக்கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி ஒற்றைச் சில்லி எனப்படும்.

சில்லிக்குப் பாண்டி என்னும் பெயரும் சிலவிடத்து அருகி வழங்கும்.

ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.

ஆடுகருவி : நான்கு சமகட்டங்கள் கொண்டதும், ஏறத்தாழ 6 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ளதுமான, ஒரு நீள் சதுர அரங்கும், ஆளுக்கொரு