பகுதி]
பாண்டி
105
சில்லி (சில்லாக்கு) எனப்படும் வட்டும், இதற்குரிய கருவிகளாம். அரங்கின் மேற்பகுதியான அரைவட்டத்திற்குச் சோழநாட்டில் மலை என்றும் கொங்கு நாட்டில் கரகம் என்றும் பெயர். சேலம் வட்டாரத்திற் கரகங் கீறாமலும் ஆடப்பெறும்.
ஆடுமுறை : முதலாவது முதற் கட்டத்திற் சில்லியெறிந்து, நொண்டியடித்து அக்கட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டங்களை ஒவ்வோர் எட்டில் மிதித்துச் சென்று கரகத்தில் அல்லது கடைசிக் கட்டத்திற்கு வெளியே காலூன்றி, மீண்டும் முன்போல் நொண்டியடித்துக் கீழ் வந்து சில்லியை மிதித்து வெளியே தள்ளி, அதை ஓர் நாட்டில் மிதித்தல் வேண்டும்.
இங்ஙனம் பிற கட்டங்களிலும், தொடர்ந்து சில்லி யெறிந்து ஆடல் வேண்டும்.
மேற் கட்டங்களில் எறிந்த சில்லியை ஒவ்வொரு கட்டமாய்க் கீழே தள்ளிக்கொண்டு வந்து, அடிக் கட்டத்திலிருந்து வெளியே தள்ளி ஒரே யெட்டில் மிதித்தல் வேண்டும்.
கட்டங்களினூடு செல்லும்போதும் மீளும்போதும், நொண்டியடிக்க வேண்டியபோதெல்லாம், நொண்டியடித்தே சென்று மீளவேண்டும்.
எறியப்பட்ட சில்லி கட்டத்திற்கப்பால் வீழினும், கட்டத்திற்குள் வீழாது கோட்டின்மேல் வீழினும் நொண்டியடித்துக் கட்டத்திற்குள்ளும் வெளியும் ஒரே யெட்டில் சில்லியை மிதிக்கத் தவறினும், கோட்டின்மேல் மிதிக்கினும், நொண்டியடிக்கும்போது தூக்கிய காலைக் கட்டத்திற்குள் ஊன்றினும், காலால் வெளியே தள்ளப்பட்ட சில்லி முதற் கட்டத்தினின்று ஒரே யெட்டில் மிதிக்க முடியாதவாறு நெடுந்தொலைவிற்குச் செல்லினும் ஆடுபவர் தவறியவராவர். அதன்பின் அடுத்தவர் ஆடல் வேண்டும். அடுத்தவரும் தவறின் முன்னவர் மீண்டும்