உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

[இருபாற்

ஆட ல்வேண்டும். இங்ஙனம், ஆட்டை முடியும்வரை இருவரும் மாறிமாறி யாடுவர்.

நாலு கட்டத்திலும் சில்லியெறிந்தாடியபின், அகங்கையில் ஒருமுறையும் புறங்கையில் ஒருமுறையும் குத்துக்கைமேல் ஒருமுறையும் சில்லியை வைத்துக்கொண்டு, கரகம்வரை கொண்டியடித்துச் சென்று மீளவேண்டும். கரகத்தில் காலூன்றிக் கொள்ளலாம்.

அதன்பின், தலைமேல் ஒருமுறையும் வலப்பாதத்தின் மேல் ஒருமுறையும் சில்லியை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வோர் எட்டில் மிதித்துக் கரகம் வரை நடந்து சென்று நடந்து மீளவேண்டும்.

பின்பு, அரங்கிற்கு முன் நின்று, கரகத்தில் அல்லது மேற்புற வெளியில் சில்லியெறிந்து, முன்போல் நொண்டியடித்துச் சென்று அதை மிதித்தல் வேண்டும். பின்பு அங்கு நின்று அரங்கிற்கு முன்பாகச் சில்லியெறிந்து, அங்கிருந்து நொண்டியடித்து வந்து அதை மிதித்தல் வேண்டும்.

பின்னர், மீண்டும் ஒருமுறை கரகத்தில் அல்லது மேற்புற வெளியில் சில்லியெறிந்து, கண்ணை மூடிக்கொண்டாவது மேனோக்கிக் கொண்டாவது ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் ஒவ்வோர் எட்டுவைத்து நடந்துசென்று, சில்லியை மிதித்தல் வேண்டும். ஒவ்வோர் எட்டுவைக்கும் போதும் “அமரேசா” என்று சொல்லவேண்டும். கால் கோட்டில் படாது எட்டு சரியாயிருப்பின், எதிரியார் உடன் உடன் “ரேசு” (அமரேசு) என்று வழிமொழிவர்; சரியாயில்லாவிடின் “இல்லை” என்பர். அதன்பின் எதிரியார் ஆடல்வேண்டும்.

“அமரேசா”ப் பகுதி தவறாது முடியின்; எதிரியாரை “யானையா, பூனையா ?” என்று வினவி, “யானை” என்று சொல்லின் நிமிர்ந்து நின்று தலைக்கு மேலாகவும், “பூனை” என்று சொல்லின் குனிந்து இருகாற் கவட்டூடும் சில்லியை ஒரு கட்டத்திற்குள் எறியவேண்டும். அது