பகுதி]
பாண்டி
107
எக் கட்டத்திற்குள் விழுகிறதோ அக்கட்டத்தில், மூலைக் குறுக்குக் கோடுகள் கீறல்வேண்டும். அது பழம் எனப்படும். பழம் போட்ட கட்டத்திற்குள் எதிரியார் கால் வைத்தல் கூடாது; என்றும் அதைத் தாண்டியே செல்லவேண்டும். ஆயின், எதிரியாரின் வசதிக்காக, அக்கட்டத்திற்கு வெளியே வலப்புறத்தில் அல்லது இடப்புறத்தில், கட்டத்தை யொட்டி ஓர் அரைவட்டம் அமைத்துக்கொடுக்கப்படும். அதற்கு ‘யானைக்கால்’ என்று பெயர். இங்ஙனம் ஒவ்வோர் ஆடகரும், தத்தம் பழக்கட்டத்தின் பக்கமாக எதிரியார்க்கு யானைக்கால் அமைத்துக் கொடுப்பர்.
ஒருமுறை பழம் போட்டவர் மறுமுறை முந்தியாடுவர். மறுமுறை பழத்திற்குச் சில்லியெறியும்போது, அது பழக் கட்டத்தில் விழுந்துவிடின் தவறாம்.
ஒருவரேயோ இருவருமோ எல்லாக் கட்டத்திலும் பழம் போட்டபின், அரங்கு கலைக்கப்பட்டு மீண்டும் கீறப்படும்.
II. இரட்டைச் சில்லி
முதலாம் வகை
ஆட்டின் பெயர் : இரட்டைக் கட்ட அரங்கு கீறி ஆடப்படும் சில்லி இரட்டைச் சில்லியாம்.
ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.
ஆடு கருவி : வரிசைக்கு நான்காக இருவரிசைக்கு எட்டுச் சதுரக் கட்டங்களும் அவற்றோடு மலையுங்கொண்ட ஓர் அரங்கும்; ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாம்.
ஆடு முறை : இது பெரும்பாலும் பாண்டி நாட்டு முறைப்படி ஆடப்பெறும்.