பகுதி]
பாண்டி
109
III. வானூர்திச் சில்லி
ஆட்டின் பெயர் : வானூர்திபோல் அரங்கு கீறி ஆடப்படும் சில்லி வானூர்திச் சில்லியாம். இதை ஏரோப்பிளேன் (Aeroplane) சில்லி என ஆங்கிலச் சொற்கொண்டே அழைப்பர்.
மேனாட்டு வானூர்தி தமிழ்நாட்டிற்கு வருமுன்னரே இந்த ஆட்டு ஆடப்பட்டிருப்பின், அன்று இதற்கு வேறொரு தமிழ்ப் பெயர் வழங்கியிருத்தல் வேண்டும்.
ஆடுவார் தொகை : இருவர் இதை ஆடுவர்.
ஆடுகருவி : மேலே காட்டப்பட்ட படி ஓர் அரங்கும், ஆளுக்கொரு சில்லியும், இதை ஆடுகருவியாகும்.
ஆடு முறை : முதலாவது, முதற் கட்டத்தில் சில்லியெறிந்து நொண்டியடித்து அக்கட்டத்தைத் தாண்டி, மேற் கட்டங்களுள் ஒற்றைக் கட்டங்களிலெல்லாம் ஒவ்வோர் எட்டுவைத்து நொண்டியடித்தும், இரட்டைக் கட்டங்களில் கட்டத்திற்கொன்றாக ஒரேசமயத்தில் இருகாலும் ஊன்றியும், மேலிரட்டைக் கட்டம் வரை சென்று, பின்பு அங்கிருந்து இங்ஙனமே மீண்டுவந்து முதற் கட்டத்திலுள்ள சில்லியை மிதித்து முன்புறமாக வெளியே தள்ளி, அதை ஒரே எட்டில் நொண்டியடித்து மிதித்தல் வேண்டும்.
ஆனால், கட்டத்தினின்று குதித்து மேலிரட்டைக் கட்டத்திற் காலூன்றும்போது, மலைநோக்கி ஊன்றாமல், அதற்குப் புறங்காட்டிக் குதித்து முன்புறம் நோக்கி ஊன்றவேண்டும்.