முன்னுமை
௧௫
தண்டனையே யில்லாது விளையாடுவதுமுண்டு. தண்டனை யுண்மையும் இன்மையும், தண்டனையின் வகையும் அளவும், விளையாட்டைத் தொடங்கு முன்னரே, பேசி முடிவு செய்யப்பெறும்.
(5) ஆடைதொடல் கணக்கன்மை
ஒருவர் பிறரைத் தொடும் விளையாட்டுக்களிலெல்லாம், உடம்பைத் தொடுதலன்றி ஆடையைத் தொடுதல் கணக்காகாது. ‘வண்ணான் சீலைக்கு வழக்கில்லை’ என்பது இந்நெறிமுறை பற்றிய பழமொழியாகும்.
(6) தவற்றால் ஆடகர் மாறல்
ஆட்டு நிகழும்போது ஆடுகிறவன் தவறின், அடுத்தவன் ஆடல் வேண்டும்.
(7) வென்றவர்க்கு மறு ஆட்டவசதி
ஓர் ஆட்டையில் வென்றவர்க்கு, மறு ஆட்டையில் முந்தியாடுவது அல்லது எதிர்க்கட்சியால் பிடிக்கப்படுவது போன்ற வசதியளிக்கப்பெறும்.
(8) இடத்திற்கேற்ப வேறுபடல்
பல ஆட்டுக்களை ஆடு முறையும், அவற்றிற் சொல்லும் மரபுரைகளும், இடத்திற்கு இடம் சிறிதும் பெரிதும் வேறுபட்டிருப்பது இயல்பு.
(9) ஆட்டைத்தொகை வரம்பின்மை
எவ்விளையாட்டிலும், இத்துனை ஆட்டை ஆடித் தீரவேண்டும் என்னும் கடுவரம்பில்லை. ஆடுவார் விருப்பம்போல் எத்துணை ஆட்டையும் ஆடலாம்.
பொதுவாக, ஓர் ஆட்டையில் தோற்றவன் அடுத்த ஆட்டையில் வெற்றி நம்பிக்கைகொள்ளின், அதை ஆடுமாறு எதிரியை வற்புறுத்துவது வழக்கம்.