இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
(2) இரவாட்டு
௧. கண்ணாம்பொத்தி
ஆட்டின் பெயர் : ஒருவர் ஒரு பிள்ளையின் கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும்போது, பிற பிள்ளைகள் ஓடி ஒளியும் விளையாட்டு கண்ணாம்பொத்தி எனப்படும்.
ஆடுமுறை : முதியார் ஒருவர், ஆட விரும்பும் பிள்ளைகளை யெல்லாம் ஒருங்கே இருத்திக்கொண்டு, ஒவ்வொருவரையும் சுட்டி ஒரு மரபுத் தொடரைச் சொல்லி, அத்தொடரின் இறுதிச் சொல்லாற் குறிக்கப்பெறும் பிள்ளையின் கண்ணைப் பொத்துவர். இனி, முதியார் ஒருவர் மீது எல்லாப் பிள்ளைகளும் படபடவென்று கையாலடிக்கும்போது, அம்முதியாரின் கையில் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்துவதுமுண்டு. பொத்தும்போது, மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடி ஒளிந்துகொள்வர்.
முதியார் அகப்பட்டுக்கொண்ட பிள்ளையின் கண்ணைப் பொத்திக்கொண்டிருக்கும்போது, அவ்விருவருக்கும் பின்வருமாறு உரையாட்டு நிகழும்.
- முதியவர் : கண்ணாம் பொத்தியாரே கண்ணாம் பொத்தியாரே![1]
- பிள்ளை : என்ன?
- மு : எத்தனை முட்டையிட்டாய்?[2]
- பி : மூன்று முட்டையிட்டேன்.
- மு : அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்த
- மு : அவற்றுள் ஒரு முட்டையைப் பொரித்துத் தின்றுவிட்டு, ஒரு முட்டையைப் புளித்த