உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪. பூச்சி

பூச்சி என்பது ஆள்நிழல். நிலவொளியிற் பூச்சி தெரியும்போது ஒருவரைத் தொடும் விளையாட்டு, பூச்சி அல்லது பூச்சி விளையாட்டு. ஆடுவாருள் ஏதேனுமொரு வகையில் அகப்பட்டுக்கொண்ட ஒருவர், நிலவொளியிடத்தில் நிற்க, ஏனையரெல்லாம் அருகேயுள்ள ஓர் இருண்ட இடத்தில் நின்றுகொள்வர். இருண்ட இடத்தில் நிற்பவர் ஒளியிடத்திற்கு வரின், அவரைத் தொடலாம்; இல்லாவிடின் தொடல் கூடாது. ஒளியிடத்தில் தொடப்பட்டவர் பின்பு பிறரைத் தொடுதல் வேண்டும்.