பகுதி]
நொண்டி
127
குறைத்தலைகள் கூத்தாடுவதும் தலையைக் கையிலேந்தி நிற்பதும் போன்ற மறவினைகளை நோக்கும்போது, ஒரு காற்குறைகள் நொண்டிச் சென்று நூழிலாட்டுவது வியப்பன்று.
கள்வனொருவன் படையிலுள்ள குதிரையொன்றைத் திருட முயன்று கால் தறியுண்டபின் நல்வழிப்பட்ட செய்தியைச் சிந்துச் செய்யுளாற் புனைந்து கூறும் நொண்டி நாடகம் என்னும் நாடக நூல்வகையும் உளது. ‘சீதக்காதி நொண்டி நாடகம்’ இதற்கோர் எடுத்துக்காட்டாம். இந் நாடகச் செய்தி மேற்கூறிய போர்வினைச் செய்தியின் வேறாம்.
ஆட்டின் பயன் : ஒருகால் நோய்ப்பட்டும் வெட்டுண்டும் நடக்கவியலாதபோது மறுகாலால் நொண்டியடித்து வேண்டுமிடஞ் செல்வதற்கான பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும்.
௨. நின்றால் பிடித்துக்கொள்
ஏதேனும் ஒரு வகையில் அகப்பட்டுக்கொண்டபிள்ளை பிறபிள்ளைகளை நின்றால் தொடவேண்டும்; உட்கார்ந்து கொண்டால் தொடக்கூடாது. தொடப்பட்ட பிள்ளை, பின்பு பிறரைத் தொடல் வேண்டும்.