உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௭. கும்மி

பல பேதையரும்[1] பெதும்பையரும், வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்து அடிக்கும் கூத்து கும்மி எனப்படும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதைக் கொப்பி என்பர்.

கும்முதல் கைகுவித்தல் அல்லது கைகுவித் தடித்தல். கைகுவித் தடிக்கும் விளையாட்டாதலால், இது கும்மியெனப்பட்டது.

கும்மி யாட்டத்திற்கென்று தனிவகைப் பாட்டுண்டு அது ‘கும்மியடி’ என்று தொடங்குவதோடு, அத்தொடரையே ஒவ்வோர் உருவிலும் (சரணத்திலும்) மகுடமாகவுங் கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு :

கும்மியடி பெண்ணே கும்மியடி—நல்ல
கொன்றை மலர்சூடிக் கும்மியடி
நம்மையாளும் தனி நாயகம் நம்மிடம்
நண்ணிய தென்றுநீ கும்மியடி
ஆட்சிமொழியிங்கே ஆங்கிலமாய்—என்றும்
ஆகிவிடின் அது கேடாகும்
மாட்சி மிகுந்தமிழ் மாநிலத் தாளுகை
மாதரசே வரக் கும்மியடி.


இக்காலை, ஒற்றைத் தாளத்திற்கும் அடித்தாளத்திற்கும் ஏற்கும் எல்லாப் பாட்டுக்களும் கும்மிக்கும் பாடப் படுகின்றன. ஒற்றை = ஏகம். அடி = ஆதி.



    • ஐந்தாண்டு முதல் ஏழாண்டுவரைப்பட்ட பெண் பேதை யெனப்படுவாள்.