உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

[ஆண்பாற்

(௨) சோழ கொங்கு நாட்டு முறை

சோழ கொங்கு நாடுகளிற் பொதுவாகக் கோலியைக் குண்டு அல்லது கோலிக்குண்டு என்றும், கோலியாட்டக்தைக் குண்டாட்டம் என்றும் கூறுவர். அவ் ஆட்டம், பேந்தா, அஞ்சலகுஞ்சம், இருகுழியாட்டம், முக்குழியாட்டம் முதலிய பல வகைப்படும்.

I. பேந்தா

(i) சதுரப் பேந்தா

ஆட்டின் பெயர் : பேந்தா என்னும் நீள்சதுரக் கோட்டிற்குள் உருட்டியாடுங் கோலியாட்டு பேந்தா எனப்படும். இதை வட்டப் பேந்தாவுடன் ஒப்பு நோக்கிச் சதுரப் பேந்தா என்பர். இது கொங்குநாட்டில் சிறப்பாய் விளையாடப்படுவது பற்றி, திருச்சி வட்டாரத்தில் ஒரு சிலர் இதை ஈரோட்டுப் பேந்தா என்பதுமுண்டு.

ஆடுவார் தொகை : சிறாருள்ளும் இளைஞருள்ளும் இருவர் இதை ஆடுவர்.

ஆடு கருவி : ஏறத்தாழ ஓரடி நீளமும் முக்காலடி அகலமும் நீட்டுப்போக்கில் நடுக்கோடும் உள்ள ஒரு நீள் சதுரக்கோடும், ஆடுவான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். பெருங் கோலியும் கல்லுமாயின், தெறித்தடிக்கப்படாமல் உருட்டியடிக்கப்படும். பேந்தாவிற்கு ஏறத்தாழப் பத்தடித்தொலைவில் ஓரடி நீளம் ஒரு குறுங்கோடு கீறப்பெறும். அது உத்தியெனப்படும்.

ஆடிடம் : ஆடிடம் பாண்டி நாட்டுக் கோலியாட்டிற்குப் போன்றே இதற்கும்.

ஆடு முறை : ஆடகர் இருவரும், உத்தியென்னும் கோட்டின்மேல் நின்றுகொண்டு,ஒவ்வொருவனாய்க் கோலி-