24
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
[ஆண்பாற்
குறித்த இடத்திற்கு விரைந்து ஓடுவதும்; ஆகிய வினைப் பயிற்சியே இவ் ஆட்டின் பயனாம்.
(௨) சோழ கொங்குநாட்டு முறை
I. கில்லித்தாண்டு
பாண்டி நாட்டுச் சில்லாங்குச்சும் சோழ கொங்கு காட்டுக் கில்லித்தாண்டும் ஒன்றே. ஆயினும், இடவேறுபாடு காரணமாக, ஈரிட ஆட்டிற்கும் பின்வருமாறு சில வேற்றுமைகள் உள.
(1) பெயர் : சில்லாங்குச்சு என்பது கில்லி என்றும், கம்பு என்பது தாண்டு என்றும் வழங்கும்.
பாண்டி நாட்டில், குச்செடுப்பவன் குச்சு நிலத்தில் விழுமுன் அதை அந்தரத்திற் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறப்புப் பெயரும் வழங்கவில்லை. சோழ கொங்கு நாடுகளில் அது உத்தம் அல்லது புட்டம் எனப் பெயர்பெறும். இது கீழ்வரும் கிட்டிப்புள்ளிற்கும் ஒக்கும்.
‘எடுத்து ஊற்றுதல்’ என்னும் பாண்டிநாட்டுக் குறி வீட்டிற்கு நேரான சோழ கொங்குநாட்டுக் குறியீடு ‘கஞ்சி வார்த்தல்’ என்பதாகும்.
(2) கருவி : சில்லாங்குச்சு ஒரு கடையில் மட்டுக்கூராயிருக்கும். ஆயின், கில்லி இருகடையுங் கூராயிருக்கும். இது இருமுனையும் அடித்தற்கு வசதியாம்.
(3) முறை : இரு கட்சியார் ஆடுவதாயின், பாண்டி நாட்டில் அடிக்குங் கட்சியார் அனைவரும் ஒரே சமையத்தில் அடிப்பர். அவனவன் அடிக்குங் குச்சை அவனவன் உத்தியாளே எடுப்பன். சோழ கொங்கு நாட்டிலோ, அடிக்குங் கட்சியாருள் ஒருவனே ஒரு சமயத்தில் அடிப்பன். அவன் அடித்த குச்சை எதிர்க்கட்சியார் எல்லாரும் ஆடுகளத்தில் நின்று அவருள் யாரனுேம் பிடிக்கலாம் அல்லது எடுக்கலாம். அடிக்குங் கட்சியாருள் ஒருவன் தொலைந்தபின்