44
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
[ஆண்பாற்
வைத்துக்கொண்டு கீழே உட்கார வேண்டும். முன்பு கீழே உட்கார்ந்திருந்தவன் பின்பு பிறரைத் தொடுபவனாவன். முன்பு தொட்டவன் பின்பு பிறரோடு சேர்ந்து மூட்டையில் அடித்து விளையாடுவான்.
இங்ஙனமே, நெடுகலும், தொடப்பட்டவன் மூட்டை வைத்திருப்பவனாகவும், மூட்டை வைத்திருந்தவன் தொடுபவனாகவும்,தொட்டவன் மூட்டையில் அடித்து விளையாடுபவனாகவும், மாறிக்கொண்டே வருவர்.
புதிதாய்த் தொடுபவனாகும் ஒவ்வொருவனும், முதலாவது மூட்டையில் இரண்டடியடித்து விட்டுக் கூழ் குடிக்கப் போவதும், பின்பு மீண்டும் பிறரைத் தொடுவதும், மரபாம்.
மூட்டையில் அடித்து மகிழும் ஒவ்வொருவனும் பின்பு மூட்டை தாங்கி அடிவாங்குவதற்கு இடமிருத்தலால், முன்பு பிறன் முதுகில் மூட்டையிருந்தபோது கண்ணோட்டமின்றி வன்மையாய் அடித்தவன், பின்பு தன்வினை விளைவை மிகுதியாய் அறுக்க நேரும்.
விளையாட்டு முடிந்தபின், அவனவன் துணியை அவனவன் எடுத்துக்கொள்வான்.
ஆட்டுத் தோற்ற விளக்கம் : வண்ணாருள் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வாரு துறையுண்டு. ஒருவன் இன்னொருவன் துறையில் வெளுப்பது, வசதிக் குறைவுமட்டுமன்றி இழப்புமுண்டுபண்ணும். பழங் காலத்தில் ஒவ்வொரு வண்ணானும் வண்ணாரப் பாட்டம் அல்லது வண்ணாரப் பாறை என்னும் தொழில் வரி செலுத்தவேண்டியிருந்தது. அதனால் ஒருவன் பாறையில் இன்னொருவன் வெளுப்பது, மிகக் கண்டிப்பாய்த் தடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆயினும், ஒருவன் பாறை மிக வசதியுள்ளதாகவிருப்பின், அவன் தான் வழக்கமாக உண்ணுங் கூழுண்ணச் சென்றிருக்கும்போது, பிறர் அவன் பாறையைப் பயன்படுத்தியிருப்பர். அவன் மீண்டு வரும்போது, அவர் ஓடியிருப்பர்.