இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பகுதி]
வண்ணான் தாழி
45
அவன் அவரைத் துரத்தி அடித்திருப்பன், அல்லது கடுமையாய்த் திட்டியிருப்பான்.
இச்செயலையே இவ் விளையாட்டு உணர்த்துகின்றது. தொடுபவன் வண்ணானையும், மூட்டை பாறையையும், அதில் அடிப்பவர் அவன் கூழுண்ணச் சென்றிருக்கும்போது அதைப் பயன்படுத்தும் பிற வண்ணாரையும், ஒருவனை ஓடித் தொடுவது திருட்டுத்தனமாய்ப் பாறையைப் பயன்படுத்திய ஒருவனைப் பிடித்து அடிப்பதையும், குறிப்பதாகக் கொள்ளப்படும்.
ஆட்டின் பயன் : ஓடும் ஒருவனைப் பிடிப்பதும் ஒருவனாற் பிடிபடாமல் ஓடிப்போவதுமான வினைப்பயிற்சி, இவ்விளையாட்டின் பயனாம்.