இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
ஒரு கட்சியார் தெற்கு நோக்கின் மற்றொரு கட்சியார் வடக்கு நோக்கியும், இருப்பர்.
நிற்பவருள், ஒருவன் ஓட இன்னொருவன் தொடல் வேண்டும். தொடுகிறவன் தன்னால் தொடமுடியாதென்று கண்டால், தன் கட்சியாருள் ஒருவனைச் ‘சூ’ என்று சொல்லி எழுப்புவான். பிற செய்திகளெல்லாம் பாண்டி நாட்டு முறையே.
இரு கட்சியாகப் பிரிந்துகொண்டு எதிரெதிர்த்திசையை நோக்கியிருப்பதும், “சூ” என்று சொல்லுவதுமே சோழநாட்டு வேறுபாடாம்.