உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩. அணிற் பிள்ளை

ஆட்டின் பெயர் : ஒருவன், ஒரு பெருஞ் சதுரத்தின் நடுவிலுள்ள குறுக்கை (சிலுவை) போன்ற கோட்டின்மேல் நின்றுகொண்டு, அணில்போல் முன்னும் பின்னும் இயங்கியாடும் ஆட்டு அணிற் பிள்ளை எனப்படும்.

ஆடுவார் தொகை : இதை ஐவர் ஆடுவர்.

ஆடு கருவி : நாற்சதுரமாக வகுக்கப்பட்ட பெருஞ் சதுரமும் நாற்கல்லும் இதை ஆடு கருவிகளாம்.

ஆடிடம் : பொட்டலும்,அகன்ற தெருவும் இதை ஒரு ஆடுமிடமாம்.

ஆடுமுறை : நாற்சதுரமாக வகுக்கப்பட்ட ஒரு பெருஞ் சதுரத்தின் ஒவ்வொரு சதுரத்திலும் ஒவ்வொருவ-