இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
னாக, நால்வர் நின்றுகொள்வர். பெருஞ் சதுரத்தின் நடுவில் நாற்கல் வைக்கப்படும். ஒருவன் நடுவிலுள்ள குறுக்கை போன்ற கோட்டில் குறுக்கும் மறுக்கும் முன்னும் பின்னுமாக முன்னோக்கியே இயங்கிக் கொண்டு, அந்நால்வரும் அக் கற்களை யெடாதவாறு தடுப்பன். அவர் அவனால் தொடப்படாமல் ஆளுக்கொரு கல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவனே நாற்கல்லையும் எடுத்து ஆளுக்கொன்றாகக் கையிற் கொடுக்கவுஞ் செய்யலாம். ஒவ்வொருவனும் ஒவ்வொன்றாக எடுக்கும்போதேனும், ஒருவனே நான்கையும் எடுத்துக் கொடுக்கும்போதேனும், அணிற்பிள்ளை தொட முயல்வான்: தொட்டுவிடின், தொடப்பட்டவன் அணிற்பிள்ளையாதல் வேண்டும். இங்ஙனமே தொடரும்.