உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

சடுகுடு

59

‘சடுகுடு’ முதலிய தொடர்களை மூச்சுவிடாமற் சொல்லவேண்டும் என்பது மரபு. ஆயினும் சிலர் மூச்சு விட்டுக்கொண்டே இடைவிடாது பாடிக்கொள்வர்.

எந்தக் கட்சியில் அனைவரும் முன்பு படுகின்றனரோ, அந்தக் கட்சி தோற்றதாகும். தோற்றவர்க்குத் தோல்வியால் உண்டாகும் சிற்றவமானமேயன்றி வேறொரு தண்டனையுமில்லை.

ஆட்டுத்தோற்ற விளக்கம் : பண்டைத் தமிழரசர் செய்துவந்த போர்வகைகளுள் வெட்சி என்பது ஒன்று. அது நிரை கவர்தல் அல்லது நிரை மீட்டல். இவற்றுட்பின்னது கரந்தை யெனப்படும்.

குறும்பரசர் கொள்ளைத்தலைவர் செயலாகவாவது, வேந்தர் ஏவலாலாவது நிகழ்வது நிரை கவர்தல். நிரைகவரப்பட்ட நாட்டரசன் தன் படைகளைக்கொண்டு நிரை மீட்டல் கரந்தை.

நிரை கவரும்போதும் நிரை மீட்கும்போதும் போர் நிகழும். அப்போரில் வெற்றி தருமாறு கொற்றவை என்னும் காளிக்குத் துடிகொட்டிப் பலியிடுதல் மரபு. இது கொற்றவை நிலை யெனப்படும்.

“மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”

(புறத். 4)

என்பது தொல்காப்பியம்.

சடுகுடு என்னும் விளையாட்டு, வெட்சிப்போரினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. இரு கட்சியாரும் வெட்சி மறவரும் கரந்தை மறவரும் போல்வர். இடைக்கோடு, அவ்விருசாரார் நாட்டிற்கும் இடைப்பட்ட எல்லைப்புறம் போன்றது. ‘பலிசடுகுடு’ என்று பாடுவது, காளிக்குப் பலியிடுவதையும் துடி கொட்டுவதையும் குறிப்பது (துடிப்பறையிற் சிறியவகை சடுகுடுக்கை அல்லது குடுகுடுப்பை என்று பெயர் பெற்றிருத்தல் காண்க.) இருகட்சியாரும்