இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
தத்தம் எதிர்க் கட்சியாரைப் பிடித்து நிறுத்துவது, நிரைகவர் தலையும் நிரை மீட்டலையும் நிகர்ப்பது. ‘பட்டுப் போதல்’ என்னும் வழக்கு வெட்சிப்போரில் வீழ்ந்திறத்தலைக் குறிப்பது.
ஆட்டின் பெயர் : இந்த ஆட்டினால், நீண்டநேரம் மூச்சடக்கவும், திருடனைப் பிடிக்கவும், எதிரியினின்று தப்பிக்கொள்ளவும், பயிற்சி பெறலாம்.
கொங்குநாட்டு வேறுபாடு : பாண்டிநாட்டார் சடுகுடுவிற்கு இடைக்கோடொன்றே கீறிக்கொள்வர். கொங்கு நாட்டாரோ, இருகட்சியார்க்கும் இரு வேறு சதுரக் கட்டங்களை அமைத்துக்கொள்வர். ஆடும்போது ஒவ்வொருவரும் தத்தம் கட்டத்திற்குள்ளேயே நிற்றல் வேண்டும். வெளியேறின் விலகிவிடல் வேண்டும்.