68
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
[பெண்பாற்
அதன்பின், ஐங்கல்லையும் மேலெறிந்து பிடித்து அவற்றுள் ஒன்றைச் சொக்கல் வேண்டும். சொக்குதலாவது சிலுப்புதல்.
பின்பு ஐங்கல்லையும் போட்டுப் புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி பிடிக்கச்சொன்ன கல்லைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக்காட்டல் வேண்டும். காட்டியபின் அதைத் தனியாய் எடுத்துவைத்துவிட்டு, ஏனை நான்கனுள் ஒன்றை மேலெறிந்து மூன்றைக் கீழே வைத்துவிட்டுப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழே வைத்த கல்லை வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்; அல்லது, வலக் குடங்கையிலுள்ள நாற்கற்களையும் இவ்விரண்டாக இருதடவை சற்றே மேலெறிந்து, அவற்றைப் புறம்மேனோக்கிய இடக்குடங்கையால் உடனுடன் பிடித்துக்கொள்ள வேண்டும். இங்ஙனஞ் செய்யின் பழமாம்.
ஒருத்தி ஆடும்போது, மேலெறிந்து பிடிக்குங் கல் தவறினாலும், கீழிருக்குங் கல்லை யெடுக்கும்போது பிற கல்லைத் தொட்டுவிட்டாலும், அவள் நின்றுவிடவேண்டும். அதன்பின் அடுத்தவள் ஆடுவாள். ஒருத்தி ஒரே ஆட்டையில் மறுமுறை அல்லது வழிமுறை ஆடும்போது, முன்பு விட்டதிலிருந்து ஆடுவாள். இவை எல்லாவகைக்கும் பொதுவாம்.
ஆட்டை முடிந்தபின், வென்றவள் தோற்றவளின் கைகட்கிடையில் ஒரு கல்லை வைத்து, மேற்கைமேல் மூன்று தடவை குத்துவது வழக்கம். இது எல்லா வகைக்கும் பொது.
ஆட்டின் பயன் : கையும் கைநரம்பும் இந்த ஆட்டால் உரம்பெறும். இதுவும் பொதுவாம்.
ஐந்தாங்கல் (மற்றொரு வகை)
நாலாங் கொட்டைக்குப்பின், ஐங்கல்லையுங் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்னதிற்போல் நான்குதடவை மேலே போட்டுப் போட்டு அதை ஒவ்வொரு தடவையும்