பகுதி]
தட்டாங்கல்
78
இதன்பின், இருகையிலும் மும்மூன்று கல்லை வைத்துக்கொண்டு, ஏனையொன்றை மேலெறிந்து, ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துப் பிடித்தல் வேண்டும்.
பின்பு, ஒரு கல்லை மேலெறிந்து ஆறுகல்லைக் கீழ் வைத்துப் பிடித்தபின், மீண்டும் ஒன்றைமேலெறிந்து ஏனை ஆறையும் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும். இது பெரும்புதை எனப்படும்.
இதையடுத்துத் “தப்பு–தாளம்–தலைவலி–மேளம்” நான்கும் நிகழும். பின்னர் ஒரு கல்லைக் கீழிட, அதை எதிரி எடுத்துக்கொடுத்தல் வேண்டும். இது பழத்தின் ஒப்பக்குறியாம்.
IV. பல நாலொரு கல்
ஒன்பதும் பதின்மூன்றும் பதினேழும் இருபத்தொன்றும் போல் பல நாலொடு ஒன்று சேர்ந்த கற்களை மேலெறிந்து, புறங்கையில் தாங்கிப், பிடிக்குமளவு வைத்துக்கொண்டு மிகுதியைக் கீழிட்டுவிட்டு, புறங்கையிலுள்ளவற்றை மேலேபோட்டு அகங்கையிற் பிடித்து, அவற்றினின்று நந்நான்காய் இடக்கையாற் பிடித்துக் கீழே நந்நான் காய் வைத்தல் வேண்டும். இவ்வகையிற் பெரும்பாலும் ஒரு நான்கைத்தான் பிடித்தல் கூடும்.
பின்பு, வலக்கையிலுள்ளவற்றுள் ஒரு கல்லை மேலெறிந்து அதைக் கீழேயுள்ளவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ எடுத்துக்கொண்டு பிடித்தல்வேண்டும். இங்ஙனம் கீழே கல்லுள்ளவரை (அல்லது தவறும் வரை) திரும்பத் திரும்ப ஆடவேண்டும். கையிற் பலகற்கள் சேர்ந்துவிட்டால், உடனே இடக்கையால் ஒரு நான்கை அல்லது பல நான்கைப் பிடித்து நந்நான்காய்க் கீழே வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லாக் கற்களையும் பிடித்து நந்நான்காய்க் கீழே வைத்தபின், இறுதியில் எஞ்சியுள்ள ஒற்றைக்கல்லை மேலேபோட்டுப் புறங்கையில் தாங்கி. அதை மீண்டும் மேலெறிந்து நிலத்தைத் தொட்டு, அது கீழேவிழுமுன் அதைக் கையாலழுத்தி நேரே வீழ்த்தி