பகுதி]
தட்டாங்கல்
75
பிடித்தல் வேண்டும். இங்ஙனம் மும்முறை செய்தபின், மேலெறிந்த கல்லை, மூன்று தடவை சிலுப்பியும், மூன்றுதடவை மேலேறிந்து நிலந்தொட்டுப் பிடித்தும், பின்னும் மூன்றுதடவை மேலெறிந்து நிலமும் மார்புந் தொட்டுப் பிடித்தும், முடிப்பின் பழமாம்.
சிலுப்புதலாவது, அகங்கையிலுள்ளதைப் புறங்கையிலிட்டு வெட்டிப்பிடித்தல்.
ஆடும்போது தவறும் வகையும், அதன்பின் நிகழுஞ்செய்தியும், முற்கூறியவையே.
VI. பலகல்
ஒன்பது முதல் இருபத்தைந்துவரை ஒற்றைப்படையான ஏதேனும் ஒரு தொகைக் கற்களை, மேலே போட்டுப் புறங்கையால் தாங்கி ஒருகல் தவிர மற்றவற்றை யெல்லாங் கீழே போட்டுவிட்டு, அவ்வொரு கல்லை மேலேயெறிந்து உள்ளங்கையாற் பிடித்து, அதை மீண்டும் மேலேயெறிந்து, கீழே கிடக்குங் கற்களுள் இரண்டு நான்கு ஆறு எட்டு என இரட்டைப்படையாக எடுத்துக்கொண்டு, மேலேயெறிந்த கல்லையும் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் ஒவ்வோர் எடுப்பிற்கும், முன்னும் பின்னும், ஒரு கல்லை மேலெறிதலும் அதைப் பிடித்தலும் முறையே நிகழும்.
இருகல் எடுப்பின் காய்; நான்கு ஆறு எட்டு ஆயின் பழம். பழக்கற்களெல்லாவற்றையும் தன் பங்கில் வைத்துக்கொண்டு, காய்க்கற்களிற் பாதியை விளையாட்டிற் போட்டு விடல்வேண்டும். ஆட்டை முடிந்தபின், கூடுதலான கற்களைப் பிடித்திருப்பவள் கெலித்தவளாவள்.
பிற இயல்புகளும் செய்திகளும் முற்கூறியவையே.
VII. பதினாறாங்கல்
பதினாறு கற்களைக்கொண்டு ஆடுவது பதினுறாங்கல். இது பலவகையாய் ஆடப்பெறும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதை ஆடுவர்.