உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருகுடம் தண்ணீர் ஊற்றி

87

வ : (கணைக்காலிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன்[1], விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (முழங்காலில் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (இடுப்பிற் கைவைத்து) இருமாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை: விடமாட்டேன் மலுக்கா !
வ : (தோளிற் கைவைத்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தலையிற் கைவைத்து)இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தலைக்குமேற் கைதூக்கி) இங்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !
வ : (தலைக்குமேற் கைதூக்கிக் குதித்து) இம்மாம் இம்மாம் பொன் தருகிறேன், விடடா துலுக்கா !
கை : விடமாட்டேன் மலுக்கா !

இங்ஙனம் உறழ்ந்துரையாடியபின், “ஆட்டுக் கறியும் சோறும் தருகிறேன், விடடா துலுக்கா !” என்று வரிசை முதல்வி கூறியவுடன், சிறைசெய்யப்பட்ட பிள்ளை விடுதலை செய்யப்படும். அதோடு விளையாட்டு முடியும்.


  1. ↑
    • ‘பொன் தருகிறேன்’ என்பது ‘பொன்னு தாறேன்’ என்று கொச்சை வடிவிற் சொல்லப்படும்.