பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 75 என்றால் அமிழ்தநிதி. எனவே, அமிழ்த்ம் போன்ற LI TL–#) செல்வங்களின் தொகுப்புநூல் என்று பொருள் கொள்ள வேண்டும். சார்ங்கதரன்’ என்பவர் 1363-ஆம் ஆண்டில் தம் பெயரா லேயே சிார்ங்கதர பத்ததி' என்னும் பெரிய நூல் ஒன்று: தொகுத்தார். பத்ததி என்றால் வரிசை-அதாவது-பாடல்களின் வரிசை-பாடல்களின் தொகுப்பு. இந்நூலில், கொல்லத்தர்' முதலிய பாவலர்கள் இயற்றிய 4689 பாடல்கள், 163 தலைப் பின்கீழ்த் தொகுக்கப்பட்டுள்ளன.

  • - f

காஷ்மீரைச் சேர்ந்த வல்லப தேவர் என்பவர் கி.பி. 1417-67 ஆகிய கால இடைவெளியில், மிக உயர்ந்த இலக்கிய - வர லாற்றுச் சிறப்புடைய 3527 மேற்கோள் பாடல் பகுதிகளைத் தொகுத்து சுபர்ஷித்ாவளி’ என்னும் ப்ெயரில் ஒரு பெரிய தொகைநூல் சந்தார். சுபாஷித ஆவளி=நல்ல பாடல்களின் த்ொகுப்பு வரிசை. நீலகண்ட தீட்சிதர், பிரபந்த சாகரர் என்னும் இருபெயர் களை உடைய ஒர் அறிஞர், பதின்னந்தாம் நூற்றாண்டில், 'வர்ண சார சங்கிரகம் என்னும் ப்ெயரில் ஒரு தொகைநூல் உருவாக்கினார். இந்நூல் பல்வறு குறிக்கோள்கள், பருவங் கள், இடங்கள், கடவுள் கொள்கைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிச் செல்கிறது. கி.பி. 1412-1477 ஆண்டுக்கால இடைவெளியில் சிரீவரர்' என்பவர் சுபாஷிதாவளி’ என்னும் பெயருடைய நூல் தொகுத் தார். இதில் ஏறக்குறைய நானுாறு புலவர்கள் இடம் பெற்றுள் ளனர். - விஜய சேன சூரி' என்பவர் 1591-இல், 54 பாடல்கள் கொண்ட 'சுக்தி ரத்நாவளி’ என்னும் தொகைநூல் படைத் தார். இதே பெயரில், ஹேம விஜய கணி’ என்பவரால் ஒன்றும் 'வைத்ய ரத்நா’ என்பவரால் மற்றொன்று மாக இரு நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1614-இல், ஹரிதாசர் என்பவர், இருபத்தோர் இயல்