பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76 தமிழ் நூல் தொகுப்புக் கலை களின் கீழ்ப் பல்வேறு தலைப்புக்கள் இட்டு பிரஸ்தாவ ரத்த ஹாரம் என்னும் நூல் தொகுத்துளர். - பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சுந்தரதேவர்' என்பவர், 'சுக்தி சுந்தரர்' என்னும் நூல் தொகுத்தார். இதில், பதினாறம் நூற்றாண்டிலும் பதினேழாம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்தவர்களும் அக்பர் முதலிய மன்னர்களால் சிறப்பிக்கப் பெற்றவர்களுமாகிய புலவர்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசார்ய கiந்திரர் அல்லது கiந்திரர் என்று அழைக்கப் படும் அறிஞர், கiந்த்ர சந்த்ரோதயா என்னும் நூல் தொகுத்தார். - மற்றும் கவீந்திரர் என்பவர், மிகவும் மதிக்கத்தக்க ஒரு பெரிய தொகைநூல் உருவாக்கியுள்ளார். இதில் ஏறக் குறைய இருபது இராமாயண நூல்களிலிருந்து பாடல்கள் தேர்ந் தெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. மற்றும் பல்வேறு நூல்களி லிருந்தும் பல நாடகங்களிலிருந்தும் அறுபத்து நான்கு கலை களைப் பற்றிய பலவகை நூல்களிலிருந்தும் திரட்டிய பாடல்கள் பலவும் இத்தொகை நூலில் அடங்கியுள்ளன. .* 1753-ஆம் ஆண்டில் 'விரா ஜனதா என்னும் பெரியார் 'பத்ய தரங்கிணி என்னும் பெயரில் பெரியதொரு தொகை நூல் உருவாக்கித் தந்துள்ளார். பத்திய தரங்கிணி என்றால் 'பாடல்களின் அலைவரிசை என்று பொருளாம். மற்றும் பல்வேறு நூல்களிலிருந்து பாடல்கள் தேர்ந்தெடுக் கப் பெற்றுத் தொகுக்கப்பட்டு காவ்ய சங்கிரக என்னும் நூல் உருவாக்கியுள்ளது. இந்நூற் பாடல்கள் பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிறந்த பெரியார்கள், சிறந்த பொருள்கள், சிறந்த பண்புகள் பற்றி இப்பாடல்கள் விவரிக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஹரிகவி என் பவர், ஹாராவளி அல்லது. சுபாஷித ஹாராவளி’ என்னும் பெயரில் ஒரு நூல் தொகுத்துளார். இதில், காஷ்மீர் முதல் தக்கணம் வரை உள்ள தொடர்பைக் காட்டும் வகையில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.