பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை - 77 மற்றும், ஹரி பாஸ்கரன் என்பவரின் பத்யாமிருதத்தரங் கிணி என்னும் நூலும், ரூபகோசுவாமி என்பவரின் 'பத்யா வளி என்னும் நூலும், முகுந்தா என்பவரின் பத்யாவளி நூலும், வித்யா பூஷணா என்பாரின் பத்யாவளி நூலும், காசி ராமா என்பவரின் பத்ய முக்தாவளி’ என்னும் நூலும், கோவிந்த பட்டா என்பவரின் பத்யமுக்தாவளி’ என்னும் நூலும், கவி பட்டா என்பாரின் பத்யசங்கிரக நூலும், வேணி தத்ததா என்பாரின் பத்ய வேணி என்னும் நாலும், வடமொழியில் பயனுள்ள தொகைநூல்களாகும். ஆனால், இவை சிறு சிறு தொகைநூல்கள். இவற்றைப் போல இன்னும் பலப்பல சிறு தொகை நூல்கள் வடமொழியில் உள்ளன. சம்சுகிருதம், உலகப் பழம்பெரு * மொழிகளுள் ஒன்று ஆகையாலும், இந்திய மொழிகளுள் தமிழ் போலவே சிறந்த மொழியாதலும், வட இந்திய மொழிகளின் தலைமை மொழிதாய்மொழியாதலினாலும், அம்மொழியிலுள்ள தொகை நூல்களைப் பற்றிய வரலாற்றையும் ஓரளவு அறிந்து கொள் வது, நாம் பின்னால் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நூல் தொகுப்புக்கலை ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும். ஊ, எபிரேயத் தொகை நூல்கள் பழம்பெருமொழிகளில் எபிரேய மொழியும் ஒன்று. யூதரின் மொழியாகிய இது, கி.மு. மூவாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்து இன்றுவரை வழக்கில் உள்ளது. இடைக்காலத்தில் யூதர்கள் சிதறுண்டதால், எழுத்து வழக்கு அழிந்து போக, பேச்சுவழக்கு மட்டும் இருந்து வந்தது. மீண்டும் யூதர்கள் புதுவாழ்வு பெற்ற தும் எழுத்து வழக்கும் மீண்டு வளர்ந்து வருகிறது. இன்றும் யூதர்களின் கோயில் வழிபாட்டு மொழி இதுதான். இந்த மொழியிலும் அன்றும் இன்றுமாகப் பல தொகை நூல்கள் தோன்றியுள்ளன. மாதிரிக்காகப் பழைய தொகைநூல் ஒன்றைப் பார்த்து அமைவோம்: "ஜீடா ஹா-நாசி என்னும் பெயருடைய யூத சமயத் தலைவர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், மிஷ்னா என்னும் - பெயரில் ஒரு நூல் தொகுத்தார். இஃது, இனிமையும் நயமும்