பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழ் நூல் தொகுப்புக் கலை மிக்க நூலென்று சொல்லப்படுகிறது. ஒரு நீதித் தொகுப்பு நூல் தான்'இது. மோசே என்பவர் இயற்றியதாகக் கூறப்படும் பஞ்சாகமம் (Pentateuch) என்னும் நூலிலுள்ள நீதிகளும், எழுதப்படாமல் வாய்மொழியாகவே வழங்கப்பட்ட அலாக்கா (Halalah) எனப்படும் நீதிகள் பலவும், இன்னும் சிற்சில நீதி க்ளும் இந் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. எபிரேய மொழியின் முதல் தொகை நூலாக இதனைக் கருதலாம். ஆயினும் சிறந்த, பல்வேறு பாடல்களின் தொகுப்பு நூலாக இதில்ன * எண்ண முடியாதன்றோ? - கீரீக், சம்சுகிருதம், தமிழ் ஆகியவை போலவே எபிரேய மும் தொன்மைப் பெருமையுடைய மொழியாதலின், இம் மொழியிலும் ஒரு சோறு பதம் பார்க்க வேண்டிய கட்டாயும் ஏற்பட்டது. - எ"சீனத் தொகை நூல்கள் உலகின் மிகப் பெரிய நாடாகிய சைனாவில் வழங்கப் படுவதும், மிகவும் தொன்மையானதும், பிற மொழிகளைவிட மிகுந்த எண்ணிக்கையில் நூல்களைப் பெற்றிருப்பதும் ஆகிய சீன மொழியை விட்டுவிடுவது ஒரு குறைபாடர்கிவிடும். தமிழ் நீல்தொகுப்புக் கலைபற்றி நாம் மேற்கொண்டிருக்கும் ஆரர்ய்ச்சிக்கு, சீனத் தொகைநூல்கள் பற்றிய குறிப்பும் உதவி செய்யும். சீன-மொழியில் எத்தனையோ தொகை நூல்கள் தோன்ந்தியிருக்கக் கூடும். மாதிரிக்காக ஈண்டு ஒரு சிலவற்றை எடுத்துக் கொள்வோம்: கி.மு.551 முதல் கி.மு. 479 வரை உயிர் வாழ்ந்த கன் பூஷியஸ் என்னும் தத்துவப் பேரறிஞர், வேதங்கள் போல் சிறப்பாக மதிக்கப்பெற்ற பழைய சீன நூல்களையெல்லாம் திரட்டி, ஆறு பாகங்களாக வகுத்துத் தொகுத்தார். இந்த ஆறு தொகைகளும் பிற்காலத்தில் குறைத்தும் கூட்டியும் பல மாறுதல்கள் செய்யப்பெற்று, தற்போது பதின்மூன்று பாகங் களாக வகுக்க்ப்பட்டுள்ளன. இந்தப் பதின்மூன்று தொகுதி களுக்கும் விளக்கவுரைகள் பல உள்ளன. கன்பூஷியசின் தொகை