பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. தமிழ்மொழியில் நூல்தொகுப்புக் &6ᏈᎠ6Ꮗ - நூல் தொகுப்புக் கலை முற்கூறிய உலகப் பழம் பெரு மொழிகளைப் போலவே தொன்மைச் சிறப்பும் உயர்தனிச் செம்மையும் உடைய தமிழ் மொழியிலும் அன்றுதொட்டு இன்றுவரை தொகை நூல்கள் தோன்றிப் பெருகி வருகின்றன. தமிழ் நூல் தொகுப்புக்கலை (Tamil Anthology) மிகவும் செழிப்பு உடையது; தரத்தாலும் அளவாலும் பரந்துபட்ட வளமுடையது; பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே நூல் தொகுப்புக் கலைக்கு இலக்கணம் கூறும் அளவுக்கு வளர்ச்சி பெற்றது. ஆம்! பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் தண்டியலங்காரம்’ என்னும் செய்யுள் அணியிலக் கணத் தமிழ் நூலில், செய்யுள் தொகுப்புக்கலைக்கு இலக்கணம், கூறப்பட்டுள்ளது. அது வருமாறு: "தொகை கிலைச் செய்யுள் தோன்றக் கூறின் ஒருவர் உரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் பொருள் இடம் காலம் தொழில் என நான்கினும் பாட்டினும் அளவினும் கூட்டிய வாகும்' என்பது தண்டியலங்காரம்-பொதுவணியியல் (5) நூற்பா. தண்டியலங்காரத்திற்குப் பழைய உரை ஒன்றுள்ளது. உரை யாசிரியர் பெயர் சரிவரத் தெரியவில்லை. இந்த நூற்பாவுக்கு உரிய அந்தப் பழைய உரைப்பகுதி வருமாறு: '(இதன் பொருள்) தொகைநிலைச் செய்யுள் என்பதனை விளங்கச் சொல்லின், ஒருவரால் உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவும், பலரால் உரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவுமால், அவை பொருளால் தொகுத்த பெயர் பெற்றனவும், இடத்தால் தொகுத்த பெயர் பெற்ற னவும், காலத்தால் தொகுத்த பெயர் பெற்றனவும், தொழி.