பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


82 தமிழ் நூல் தொகுப்புக் கலை லால் தொகுத்த பெயர் பெற்றனவும், பாட்டால் தொகுத்த பெயர் பெற்றனவும், அளவால் தொகுத்த பெயர் பெற்றனவும் (என்றவாறு). அவற்றுள், ஒருவரால் உரைக்கப்பட்டது-திருவள்ளுவப் பயன்; பலரால் உரைக்கப்பட்டது - நெடுந்தொகை. இஃது எல்லாத் தொகைக்கும் பொதுவிலக்கணம். பொருளால் தொகுத்தது - புறநானூறு. இடத்தால் தொகுத்தது-களவழி நாற்பது. காலத்தால் தொகுத்தது - கார் நாற்பது. தொழி லால் தொகுத்தது-ஐந்திணை. பாட்டால் தொகுத்தது-கலித் தொகை, அளவால் தொகுத்தது - குறுந்தொகை. இவை சிறப் பிலக்கணம். "கூட்டிய' என்ற விதப்பான், இவ் வறுவகையானுமன்றிப் பிறவற்றாற் பெயர்பெற்று வருவனவு முளவேல், அவையுங் கொள்க-' - மேலுள்ள நூற்பாவாலும், பழைய உரைப் பகுதியாலும் அறிய வேண்டுவன பல உள; அவை வருமாறு: (1) பலர் பாடல்களின் தொகுப்பே தொகைநூல்' எனப் படும் என்பதென்றில்லை; ஒருவர் பாடிய பாடல்களின் தொகுப்பும் தொகைநூல் எனப்படும் என்னும் செய்தி அறியப் படுகிறது. ஆனால், ஒருவர் பாடிய பாடல்கள், ஒன்றோ டொன்று தொடர்பின்றித் தனித்தனிக் கருத்து உடையதாக இருக்க வேண்டும். ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கு மாயின், அத்தகைய நூல் தொகை நிலை என்று சொல்லப் படாமல், தொடர்நிலை என்று பெயர் பெறும்-என்று தண்டியலங்காரம் அடுத்த நூற்பாக்களில் அறிவித்துள்ளது. ஈண்டு இராமலிங்கத் தம்பிரான் அவர்களால் எழுதப் பட்டுள்ள குறிப்புரையில், தொகை நிலைச் செய்யுளாவது - ஒரு செய்யுளோடு மற்றொரு செய்யுளுக்குத் தொடர்பு யாது மின்றித் தனித்தனியே ஒரு பொருள் உணர்த்துஞ் செய்யுள்கள் பல தொகுக்கப்பட்ட நூல் என்று கூறப்பட்டிருப்பதும் கருதற் பாலது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தண்டியலங்காரம் என்னும் தமிழ் நூலில் சொல்லப்பட்டுள்ள இந்தக் கருத்து, மேற்