பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


84

தமிழ் நூல் தொகுப்புக் கலை

தோன்றலாம். ஒன்றோடொன்று தொடர்பில்லாத பல நீதிகளைப் பல தலைப்புகளின் கீழ்த் தனித்தனியே கூறுவதாலும் மூவேறு வகைப்பட்ட அறம்-பொருள்-காமம் என்னும் முப்பொருள்களின் தொகுப்பாயிருப்பதாலும் திருக்குறலும் ஒரு தொகைநூல் எனப்பட்டது போலும்! அங்ங்ன மெனில், இது போன்றன பிறவும் தொகை நூல்கள் எனப்படலாம்.

(3) அடுத்து. இந்த உரையில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ள பொருளால் பெயர் பெற்ற புறநானூறும், பாட்டால் பெயர் பெற்ற கலித்தொகையும், அளவால் பெயர் பெற்ற குறுந் தொகையும் பலர் பாடல்களின் கலவைத் தொகுப்பா தலின், இந்நூல்கள் பற்றி எவருக்கும் எவ்வித ஐயப்பாடும் எழ இடமில்லை. ஆனால். ஒவ்வொரு புலவரால் இயற்றப்பட்டனவாகிய களவழிநாற்பதும், கார் நாற்பதும், ஐந்திணை ஐம்பது, ஐந்தினை எழுபது-திணைமொழி ஐம்பது- திணைமாலை நூற்றைம்பது-என்னும் ஐந்திணை பற்றிய நூல்கள் நான்கும் தொகைநூல்களாகுமா என்ற ஐயம் ஒரு சிலருக்குத் தோன்றலாம்.களவழி நாற்பது என்னும் நூல், களம்என்னும் குறிப்பிட்ட ஒர் இடத்தைப் பற்றிய நாற்ப்து பாடல்களின் தொகுப்பாதலாலும், கார் நாற்பது என்னும் நூல், கார் காலம் என்னும் குறிப்பிட்ட ஒரு காலத்தைப் பற்றிய நாற்பது-பாட்டுக்களின் தொகுப்பாதலாலும்,-ஐந்திணை நூல் ஒவ்வொன்றும், இருத்தல் (முல்லை)-புணர்தல் (குறிஞ்சி) - ஊடல் - (மருதம்). பிரிதல் (பாலை)-இரங்கல் (நெய்தல்)- என்னும் ஐந்திணைத் தொழில் கள் பற்றிய பாடல்களின் தொகுப்பாதலாலும் தொகை நூல்கள் எனப்பட்டன போலும்! அங்ங்னமெனில், ஒரே புலவரால் பாடப்பட்டிருப்பினும் குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றிய பல உதிரிப் பாடல்களின் தொகுப்பும், பல பொருள்கள் பற்றிய பல உதிரிப் பாடல்களின் தொகுப்பும் ஆக உள்ளனவெல்லாம், தொகை நூல்கள் எனப்படலாம் போலும்!

(4) மேற்காட்டியுள்ள பழைய உரைப் பகுதியினிடையே, “...இஃது எல்லாத் தொகைக்கும் பொது விலக்கணம்...... இவை சிறப்பிலக்கணம் என்னும் இருவேறு தொடர்கள் இருப்பதைக் காணலாம். அஃதாவது,-எந்தத் தொகை நூலும்