பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ் மொழியில் நூல் தொகுப்புக் கலை 85 ஒருவர் பாடல்களின் தொகுப்பாகவோ, அல்லது பலர் பாடல் களின் தொகுப்பாகவோ இருக்கும், இது தொகை நாவின் பொது இலக்கணம். அடுத்து, ஒரு தொகைநூல், ஒரு பொருளையோ-இடத்தையோ-காலத்தையோ-தொழிலையோ -பாவின வகையையோ - அளவையோ அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பெறும்; இது தொகை நூலின் சிறப் பிலக்கணம். - (5) பழைய உரைப்பக கியின் இறுகியில். கட்டிய என்ற விதப்பான். இவ் வறுவகையானு மன்றிப் பெயர் பெற்று வருவனவு முளவேல் அவையுங் கொள்க’ என்ம்ை செய்கி'இருக்கக் காணலாம். எனவே, மேற்கூறிய அறு வகையே யல்லாமல், குறிப்பிட்ட கடவுளரையோ- பெரியாரையோ - மொழியையோ-இலக்கியத்தையோ - கலையையோ.கொள்கை யையோ - பண்பையோ - ஒரு சுவையையோ . இன்ன பிற வற்றையோ அடிப்படையாகக் கொண்டும். இவற்றுள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட பலவற்றை ஒருசேர அடிப்படையாகக் கொண்டும் நால்கள் தொகக் கப்பெறும் என்பது புலனாகம். இன்னும், குறிப்பிட்ட ஒரே பொருள் - இடம்-காவம்-தொழில். பாவினம் அளவு கடவுளர் - பெரியோர் - மொழி .இவக்யெர் - கலை - கொள்கை . பண்பு - சுவை-பற்றி மட்டும் அல்லாமல், ஒத்த பல பொருள்களைப் பற்றிய் கொகுப்பம், பல இடங்களைப் பற்றிய தொகுப்பும், பல காலங்களைப் பற்றிய தொகுப்பும், பல கொழில்களைப் பற்றிய தொகுப்பும். பல 'பாவினங்கள் பற்றிய தொகுப்பும், கடவுளர் பலரைப் பற்றிய தொகுப்பும், பெரியார்கள்-அறிஞர்கள்-அரசர்கள் முதலியோர் பலரைப் பற்றிய தொகுப்பும், பல மொழிகளைப் பற்றிய தொகுப்பும் பல இலக்கியங்களைப்பற்றிய தொகுப்பும். பல கலைகளைப் பற்றிய தொகுப்பும், பல கொள்கைகளைப் பற் றிய தொகுப்பும், பல பண்புகளைப் பற்றிய தொகுப்பும், பல நீதிகளைப் பற்றிய தொகுப்பும், பல சுவைகளைப் பற்றிய தொகுப்பும், இன்ன பிறவற்றைப் பற்றிய தொகுப்புக்களும் தனிதனித் துறைத் தொகை நூல்களாக மதிக்கப்பெறும் என் றும் நுனித்துணரலாம். தண்டியலங்காரம் என்னும் தமிழ் நூல், பன்னிரண்டாம்