பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மொழியில் நூல் தொகுப்புக் கலை 87 நுணுக்கங்கள் அறியப்படுகின்றன. இருபதாம் நூற்றாண் டில் ஐரோப்பிய - அமெரிக்கக் கலைக்களஞ்சியங்கள் கூறும் விளக்கத்தை, அன்றே ஒரு தமிழ் நூல் அறிவித்திருப்பது பெருமைக்கு உரியதாகும். - இத்துணைப் பொருமைக்கு உரிய தமிழ் மொழியில், அன்று தொட்டு இன்று வரை, நூற்றுக் கணக்கில் அன்று, ஆயிரக் கணக்கில் தொகை நூல்கள் தோன்றியுள்ளன.இந்தஎண்ணிக்கை வியப்பளிக்கலாம்; ஆனால் உண்மை. இந்தத் தொகை நூல் களைப் பின்வருமாறு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்க்லாம். அவை வருமாறு:1. தனித்தனிப் பாடல் தொகுப்பு புறநானூறு, பட்டினத்தார் பாடல் முதலிய நூல்களைப் போல, தனித்தனிப் பாடல்களின் சேர்க்கையாகிய தொகை நூல்கள், இந்த முதல் பிரிவில் அடங்கும். இதிலேயே இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. அவை:-புறநானூறு, அகநானூறு முத லிய தொகை நூல்கள் பலர் பாடல்களின் தொகுப்பாகும். இத்தகையன ஒரு வகை. இவற்றிற்குப் 'பன் மலர் மாலை' எனப் பெயர் தரலாம். அடுத்து. - பட்டினத்தார் பாடல்,பாரதிதாசன் கவிதைகள் முதலிய தொகை நூல்கள், ஒருவரே பல நேரங்களில் பல பொருள்கள் பற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். இத்தகையன இரண்டாவது வகை. இவற்றை 'தனி மலர் மாலை' என வழங்கலாம். பன் மலர் மாலை என்பது, பல இன மலர்களால் தொகுக்கப்பட்டது. தனி மலர் மாலை என்பது, ஒர் இன மலர்களால் தொகுக்கப்பட்து. 2. தனித்தனி நூல் திரட்டு ஐங்குறு நூறு. குமரகுருபரர் பிரபந்தத்திரட்டு முதலிய நூல்களைப் போல, தனித்தனி நூல்கள் பலவற்றின் சேர்க்கை யாகிய தொகைகள் - திரட்டுகள் இரண்டாம் பிரிவில் அடங் கும். இதிலும் இரண்டு உட்பிரிவுகள் உள. அவையாவன:ஐங்குறுநூறு என்பது, ஒரம்போகியார் என்னும் புலவர் பாடிய நூறு பாடல்கள் கொண்ட மருதம் என்னும் சிறு நூலும், அம் மூவனார் பாடிய நூறு பாடல் கொண்ட 'நெய்தல்’ என்னும் சிறு நூலும், கபிலர் பாடிய நூறு பாடல் கொண்ட 'குறிஞ்சி'