பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் சிறு நூலும், ஒதலாந்தையார் பாடிய நூறு பாடல் கொண்ட பாலை' என்னும் சிறு நூலும், பேயனார் பாடிய நூறு பாடல் கொண்ட 'முல்லை என்னும் சிறு நூலும் ஆகிய ஐந்து நூல்களின் திரட்டாகும். ஐங்குறு நூறு என்னும் தொகை நூலை, ஐந்து தனித்தனி நூல்களின் திரட்டு என்று கூறுவது, சிலருக்கு -இல்லை-பலருக்குப் புதுமையாகவும் வியப்பாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை இதுதான். இது பின்னர்த்தனித் தலைப்பின்கீழ் ஆராயப் பெறும். எனவே, ஐங்குறு நூறு ஒரு திரட்டாகும். பதினோராந் திருமுறை என்னும் நூலும் இது போன்றதே. திருவாலவாயுடையார் முதல் நம்பியாண்டார் நம்பி ஈறாக உள்ள பாவலர்கள் பன்னிருவர் இயற்றிய நாற்பது சிறுசிறு நூல்களின் திரட்டே பதினோராந் திருமுறையாகும். பலர் நூல்களின் திரட்டாகிய இத்தகையன, திரட்டு வகைகள் இரண்டனுள் முதல் வகையாகும். இவற்றிற்குப் 'பன் மாலைத் திரள் எனப் பெயர் வழங்கலாம். அடுத்து,-குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு என்பது, குமர குருபரர் அடிகளார் இயற்றிய பல நூல்கள் சேர்ந்த ஒரு திரட்டு நூலாகும். 'சிவப்பிரகாசர் பிரபந்தத் திரட்டு என்பது சிவப்பிரகாச அடிகளார் இயற்றிய பல நூல்கள் இணைந்த ஒரு திரட்டு நூலாகும். ஒருவர் நூல்களின் திரட்டாகிய இத்தகை யன,திரட்டு வகைகள் இரண்டனுள் இரண்டாவது வகையாகும் இவற்றிற்குத் தனி மாலைத்திரள் என்னும் பொதுப்பெயர் வழங்கலாம். - 3. பாடலும் நூலும் கலப்பு தனித்தனிப் பாடல்கள் பலவும், தனித்தனி நூல்கள் சிலவும் அல்லது பலவும் கலந்த தொகைநூல்களை மூன்றாம் பிரிவாகச் சொல்லலாம். இதற்குப் பலரும் அறிந்த எடுத்துக் காட்டு ஒன்றுவேண்டுமானால்,"பாரதியார் கவிதைகள் என்னும் நூலைக் கூறலாம். இதில், பல்வேறு பொருள்கள் பற்றிப் பாரதியார் பாடிய உதிரிப் பாடல்கள் பலவும், பாஞ்சாலியின் சபதம் - கண்ணன் பாட்டு - குயிற் பாட்டு - சுய சரிதை - புதிய ஆத்தி குடி முதலிய சிறு நூல்கள் சிலவும் தொகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இத்தகைய கலப்புத் தொகை நூல்களுக்கு மலரும்