பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 தமிழ் நூல் தொகுப்புக் கலை மொழிகளில் பாடல் தொகைநூல்களைப் போலவே உரை நடைத் தொகைநூல்களும் தொகுக்கப்பட்டிருப்பினும், இந்த நூலில் நாம் உரைநடைத் தொகுப்புக்களைத் தொகை நூல் களாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால், தொல்காப் பியம் சங்கநூல்கள் முதலிய இலக்கண இலக்கிய நூல்களுக்குப் பழைய உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைகள், செய்யுள் போன்ற தகுதியுடையனவாதலாலும், அவ்வுரைகளுக்கிடையே பல பாடல்கள் தொகுத்துத் தரப்பட்டிருப்பதாலும், இந்நூலில் பழைய உரையாசிரியர்களின் உரைநூற்கள் இடம் பெறும் ஒவ்வோர் உரைநூலையும் ஒவ்வொரு பாடல் தொகுப்பு நூலாகக் கொள்ளலாம். மற்றும், தண்டியலங்கார உரையாசிரியர், திருக்குறள் போன்றவற்றைத் தொகை நூல்கள் என்று கூறியிருப்பினும் அத்தகைய நூல்கள் எல்லாவற்றையும் தொகைநூல்களாக இங்கே எடுத்துக் கொள்ளவில்லை. அன்றியும், முதல் வகுப்பிலிருந்து கலையிளைஞர் (B.A.) வகுப்பு வரையிலும் கற்றுத் தருவதற்காக இதுவரையும் ஆயிரக் கணக்கான தமிழ்ப்பாட நூல்கள் (Tamil Text Books) பல நிறுவனங்களாலும், அரசாங்கத்தாலும், பல்கலைக்கழகங்களா லும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தமிழ்ப் பாட நூலையும் ஒவ்வொரு தொகைநூலாகக் கூறலாம். இந்தத் தமிழ்ப் பாடநூல்களையும் தொகைநூல்களாக நாம் சண்டு எடுத்துக் கொள்ளவில்லை. பண்டு எல்லா நூல்களுமே செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. இந்த நடைமுறை, வேறு பழைய மொழிகளி லும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. எந்த நூலையும் செய்யுள் நடையில் எழுதினால், நெட்டுருச் செய்வதற்கும் நினைவில் நிறுத்துவதற்கும், சுவைத்து இன்புறுவதற்கும் தக்கவாய்ப்பாக இருக்கும் என்று கருதி அவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். மேலும், மக்கள் உரையாடும் உரைநடையில் எழுதுவதிலும் செய்யுள் நடையில் எழுதுவதே கற்றறிந்த புலவர்கட்குப் பெருமையாகும் என்றும் கருதப்பட்டிருக்கலாம். இந்த அடிப்