பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 91 படையில், தமிழில் எல்லாத்துறை நூல்களுமே- எல்லாக் கலை நூல்களுமே செய்யுள் நடையில் எழுதப்பட்டது இயல்பே. எனவே, கணக்கு, மருத்துவம், சோதிடம், அகர வரிசை (அகராதி), மொழியியல் (இலக்கணம்) முதலிய அனைத்தும் தமிழில் செய்யுள்நடையிலேயே உள்ளன. ஆகவே, சுவைத்து இன்புறுங் கூறு சிறிது குறைவாயிருப்பினும், இத்தகைய துறை களைச் சேர்ந்த பாடல்களின் தொகுப்பு நூல்களும் தொகை நூல்களாக இந்நூலில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. நூல் தொகைப் பட்டியல் ஒரு மொழியில் உள்ள நூல்களின் பெயர்களைக் காலவாரி யாகவோ அல்லது வேறு வகையாகவோ வரிசைப் படுத்தித் தொகுக்கப்பட்டுள்ள பட்டியல், நூல் தொகைப் பட்டியல் எனப்படும். இதனை ஆங்கிலத்தில் Bibliography (பிபிளியோ கிராஃபி) என்கின்றனர். நூலின் பெயருடன், நூலின் இயல்பு, ஆசிரியர் பெயர், அச்சான ஆண்டு - இடம்-அச்சிட்டவர்-வெளி யிட்டவர் பெயர் முதலிய சிறு விவரங்கள் கொடுப்பதும் உண்டு; எனவே, இதனை, நூல் விவர அட்டவணை, என்றும் அழைப்பர். ஜான் மர்டாக் என்னும் அறிஞர், தமிழில் அச் சாகியிருந்த நூல்களின் விவர அட்டவணை ஒன்றை கி.பி. 1865 - ல் வெளியிட்டார். மற்றும், தமிழ் மொழி-இலக்கியம் பற்றி நூற்றொரு பக்கங்கள் கொண்ட ஒர் ஆராய்ச்சி முக வுரையும் இவர் இந்த நூலுக்கு முன்னால் அமைத்துள்ளார். தமிழ் நூற்றொகைப் பட்டியலில் இதனை முதலாவதாகக் கூறலாம். கர்னல் மெக்கன்சி என்னும் பெரியார், 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தென் நாட்டின் பல இடங்களில் இருந்த பழைய தமிழ்ச் சுவடிகள் பலவற்றைத் தேடிக் கண்டு. பிடித்துக் கொணரச் செய்து பட்டியல் தொகுத்து வைத்தார். மனோன்மணிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளையவர்களும் நூற் றொகை விளக்கம்' என்னும் பெயரில், பட்டியல் நூல் ஒன்று வெளியிட்டார். இக் காலத்தில் சில நூல் நிலையங்களும் இவ் வாறு வெளியிட்டுள்ளன. தமிழக அரசும் தமிழ் நூல் விவர அட்டவணை என்னும் பெயரில், அண்மைக் காலத்தில் பட்டி யல்கள் வெளியிட்டுள்ளது. இவையெல்லாம் நூல் தொகைப் LLų.uái” (Bibliography) arsi Gjib பெயர் பெறும்.