பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 தமிழ் நூல் தொகுப்புக் கலை தொகை நூல் பட்டியல்: ஆனால், நாம் இந்த ஆராய்ச்சி நூலில் ஆயிரக்கணக்கில் தொகுத்துக் கொடுக்கவிருப்பது நூல் தொகைப்பட்டியல் அன்று. நாம் கொடுக்கப் போவது தொகை நூல் பட்டியல் ஆகும். அஃதாவது, - பல பாடல்களை ஒரு நூலாகத் தொகுத் துள்ள தொகை நூல்கள் பலவற்றை நாம் ஆராய்ந்தறிய இருக்கிறோம். எனவே, நூற் பெயர்த் தொகைக்கும் தொகை நூலுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர வேண்டும். வேண்டுமானால், நூல்தொகைப் பட்டியல்கள் பல நூற் பெயர்களின் தொகுப்பாயிருப்பதால், அவற்றையும் ஒருவகைத் தொகை நூல்களாக நாம் ஒருவாறு எடுத்துக் கொள்ளலாம்'அவ்வளவுதான்! தமிழ் நூல் தொகுப்புக் கலை அடுத்து, - இந்த ஆராய்ச்சி நூலுக்குத் தமிழ் நூல், தொகுப்புக் கலை என்னும் பெயர் பொருந்துமாற்றைக் காண வேண்டும். இந்த பெயரின் இடையேயுள்ள நூல் தொகுப்பு என்னும் தொடருக்கு, நூலாகத் தொகுத்தல் நூல்களைத் தொகுத்தல்’ என இருவகையாகப் பொருள் கொள்ள வேண்டும். அகநானூறு-புறநானூறு போன்றவை பல உதிரிப் பாடல் களை நூலாகத் தொகுத்து உருவாக்கப் பட்டவை யாதலின், இன்னவை, நூலாகத் தொகுத்தல், என்னும் பொருளுக்கு உரியன. பதினோராந்திருமுறை, குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு போன்றவை, பல நூல்களைத் தொகுத்து உருவாக் கிய திரட்டுகள் ஆதலின், இன்னவை, நூல்களைத் தொகுத் தல்’ என்னும் பொருளுக்கு ஏற்றனவாம். இந்த இருவகையான தொகைநூல்களும் நிரம்ப இடம் பெற்றிருப்பதால், இந்த ஆராய்ச்சி நூலுக்குத், தமிழ் நூல் தொகுப்புக்கலை என்னும் பொதுவான பெயர் தரப்பட்டது. கலைக் களஞ்சியம் மற்றும், இந்த நூலில் ஏராளமான தொகை நூல்கள் இடம் பெற்றிருப்பதால், தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் பெயரோடு களஞ்சியம்' என்பதும் சேர்க்கப்பட்டுத் தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்' என்னும் பெயர் இந்நூலுக்குத் தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Encyclopaedia of Tamil Anthology’ arsörgy G3 tráil av avfrub.