பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தொல்காப்பியத்துக்கு முன் (தலைச் சங்க காலம்) இதுவரையும் முழுமையாகக் கிடைத்துள்ள தமிழ் நூல் களுள் மிகவும் முற்பட்டதான தொல்காப்பியம், ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னர் - அதாவது - கி.மு. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்டதாக ஆராய்ச்சி யாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் இலக்கியம் அன்று; ஒர் இலக்கண நூல். தொல்காப்பியம் - பொருளதி காரத்தில், செய்யுள் இயற்றுவதற்கு இலக்கணம் கூறும் செய் யுளியல்’ என்னும் ஒரு பகுதி உள்ள தென்றும், அந்தப் பகுதியில் ஆசிரியர் தொல்காப்பியர் தமக்கு முன்னாலேயே புலவர் பலர் செய்யுள் இலக்கண நூல்கள் இயற்றியிருப்பதாகப் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார் என்றும் முன்னர் ஒரிடத் தில் கூறியுள்ளோம். மற்றும், இலக்கியம் கண்டதற்கு இலக்க ணம்'என்றபடி, இந்த இலக்கண நூல்கள் தோன்றுவதற்கு முன்பே. தமிழில் பல செய்யுள்கள்; பல செய்யுள் நூல்கள் தோன்றியிருந்தன என்ற குறிப்பும் ஆங்கே கொடுக்கப்பட் டுள்ளது. அன்றியும்; முழுச் செய்யுள் நூல்கள் தோன்றுவதற்கு முன்பு, தனித்தனி உதிரிப்பாடல்களே தோன்றியிருக்க முடியும் என்ற செய்தியும் ஆங்கே அறிவிக்கப்பட்டுள்ளது. அங்ங்ன மெனில்: தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன்பே இயற்றப் பட்ட பாடல்கள் எங்கே? பாடல் நூல்கள் எங்கே? இந்த வினாவிற்குத் தக்க விடை கிடைக்குமா? தொல்காப்பியராலேயே கோடிட்டுக் காட்டப்பட்ட இலக் கண நூல்கள் எல்லாம் இல்லாது ஒழிந்தது போலவே இலக்கி யங்களும் மறைந்து போயின. முழு முழு நூல்களே மறைந்து போயிருக்கின்ற நிலையில்; தனித்தனி உதிரிப்பாடல்களின் தலையெழுத்து என்னவாயிருக்க முடியும்; தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உதிரிப் பாடல்களைஒருசிலராவது ஒலைச். சுவடிகளில் தொகுத்து எழுதி வைத்துத் தான் இருப்பர். திரட் டுக்கத்தின் அடிப்படையில். தெரிந்த பாடல்களைக் குறித்து வைக்காமல் இருந்திருக்க முடியாது. ஆனால், அத்தகைய