பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ் நூல் தொகுப்புக் கலை தொகுப்புக்கள் அழிந்து போய்விட்டிருக்க வேண்டும். இது குறித்து வேறு என்ன சொல்ல இருக்கிறது. ஆனாலும், ஏதோ சொல்ல முடியும் போல் தோன்றுகிறது. தொல்காப்பியத்துக்கு முன்பே தோன்றிய பாடல்களும், தொகை நூல்களும் கிடைக்காமற்போயினும், அவற்றுள் சில வற்றின் பெயர்களையாவது அறிந்து கொள்வதற்கு உரிய தடயம் இறையனார் அகப்பொருள் உரையில் கிடைத் துள்ளது. அதனை அறிவிக்கும் உரைப்பகுதி வருமாறு: 'தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர். அவருள், தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும் திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் முரிஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என இத் தொடக்கத்தார் ஐந்நூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்ப தின்மர் பாடினார் 67TL. அவர்களால் பாடப்பட்டன எத் துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியா விரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானுற்று நாற்பதிற்றியாண்டு சங்கம் இருந்தார் என்ப. அவர் களைச் சங்கம் இரீஇயினார் காய்ச்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங் கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்க மிருந்து தமிழராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப அவர்க்கு நூல் அகத்தியம் என்ப. இனி, இடைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும் தொல் காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியும் வெள் ளூர்க் காப்பியனும் சிறு பாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக் கோமாஆம் கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழு நூறுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலி யும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும் என இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும்,