பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழ் நூல் தொகுப்புக் கலை நூல்கள் - நூறாயிரக்கணக்கான பாடல்கள் இயற்றியிருப் பார்களல்லவா? அவைகள் எல்லாம் எங்கே? என்னவோ - ஒருசிலவற்றின் பெயர்களாவது தெரியவந்திருப்பது ஒரு பெரும்பேறே! தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல்'அண்மையிலிருந்து சேய்மைக்குச் செல்லுதல் - நிகழ்காலத் திலிருந்து கடந்த காலத்திற்குச் செல்லுதல், - என்னும் உள GT6 (p6opLiutą (Phychological Method) 5srib Gaol –###3 நூல்களிலிருந்து, இடைச்சங்க, தலைச்சங்க நூல்களுக்குச் செல்லவேண்டும். கடைச்சங்க நூல்களாகக் குறிப்பிடப்பட்ட வற்றுள் நெடுந்தொகை நானூறு முதலாக எழுபது பாடல்' ஈறாக உள்ள எட்டு நூல்களும் நிகழ்காலத்தில் நாம் நன்கு கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் நூல்களாகும்.இவை இருப்பது உண்மை; பொய்யன்று. இவை போலவே இடைச் சங்கத் தனவாகவும் தலைச் சங்கத்தனவாகவும் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களும் ஒரு காலத்தில் இருந்ததையேயாகும். இப்போது கிடைக்காததால், இவற்றை இல்லாத கற்பனையென்று எவரும் கதைக்க முடியாது. கடைச் சங்கத்தனவாகக் கூறப்பட்டுள்ள வற்றுள்ளும் நான்கு கிடைக்கவில்லையே! கிடைத்துள்ள 'நெடுந்தொகை நானூறு முதலிய எட்டு நூல்களையுங்கூட, சென்ற நூற்றாண்டினர் அறிந்திருக்கவில்லை. இவ் வெட்டும், அண்மைக் காலத்தில்தான் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அச்சிடப்பெற்று நம் கைகளில் உலவுகின்றன. எனவே முதல் இரண்டு சங்கத்தனவாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் இருந் தவையே - இந்த இலக்கியச் செல்வங்களை நாம் இழந்து விட் டோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இனி, தொல்காப்பியத்திற்கு முற்பட்ட தலைச்சங்க நூல் களைப் பற்றி ஒரு சிறிது ஆராய்வோம்: இறையனார் அகப் பொருள் உரை, அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முது நாரையும் முதுகுருகும் களரியாவிரையும் என இத் தொடக்கத்தன எனத் தலைச்சங்க நூல்களாக நான்கு நூல்களைப் பெயர் சுட்டித் தெரிவித்துள்ளது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.