பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தமிழ் நூல் தொகுப்புக் கலை களின் தொகுப்பாகிய கலித்தொகையைப் போலவே, பரி பாடல் தொகை நூலும் பாவகையால் பெயர் பெற்றதாகும். தலைச்சங்கம் இற்றைக்கு 11,790 ஆண்டுக்கு முன் தோன்றி 4,440 ஆண்டுகள் நடைபெற்றதாக இறையனார் அகப்பொருள் உரையால் அறிந்தோம். எனவே, தலைச்சங்கத்தைச் சேர்ந்த தாகக் கூறப்பட்டுள்ள இந்தப் பரிபாடல் நூல், இற்றைக்கு ஏறக்குறையப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப் பட்டிருக்கவேண்டும் என்பதும் அறியப்படும். இதில் நம்பிக்கை யில்லாமல் எவ்வளவு குறைத்துப் பார்க்கினும், இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுக்கு முன்யாவது தலைச் சங்கத்துப் பரிபாடல் தொகை நூல் இயற்றப்பட்டிருக்கலாம். சுருங்கக் கூறின், தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழில் பரிபாடல் என் னும் தொகைநூல் இருந்தது என்பது தெளிவு. ஆகவே, நாம் முன்தலைப்பில் கண்ட உலகமொழித் தொகை நூல்களைவிட, இந்தப் பெரும் பரிபாடல் தொகை நூல் மிகவும் முற்பட்டது என்பது உறுதி. 2.3. முது காரை, முது குருகு இறையனார் அகப்பொருள் உரையில் பரிபாடலுக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடப்பட்டுள்ள முதுநாரை, முது குருகு என்னும் இரு நூல்களும் புரியாத புதிராக உள்ளன. நாரையும் குருகும் ஓரினத்தவை, - அஃதாவது,-கொக்கினத்தைச் சேர்ந்த பறவைகள். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. ஒற்றுமையுடைய இவற்றுக் கிடையே வேறுபாடுகள் உண்டு. இதனை யாப் பருங்கல (உறுப்பியல் -9, 10) விருத்தியுரையில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ள - நூல் பெயர் தெரியாத, ' குருகு நாரையொடு கொட்பானா விரிதிரை நீர் வியன் கழனி...' என்னும் பாடல் பகுதியில் தனித்தனியாய்க் கூறப்பட்டிருப்ப தனாலும் அறியலாம். மற்றும், ஐங்குறு நூற்றில் - நெய்தல் பகுதியில் - வெள்ளாங் குருகுப் பத்தில் உள்ள, “ வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடங்டை நாரை."