பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தமிழ் நூல் தொகுப்புக் கலை பறவையினம் என்னும் பொருளே பொருத்தமானதாகத் தெரிகிறது. மற்றும், குருகு என்னும் சொல்லுக்கு, சிறப்பாகக் கோழி, அன்றிற் பறவை என்னும் பொருள்களும், பொதுவா கப் பறவை என்னும் பொருளும் உண்டெனினும், உடன் கொடுக்கப்பட்டுள்ள முது நாரை' என்னும் பெயரையும் நோக்குங்கால், குருகு' என்பதும் கொக்கினத்தைச் சேர்ந்த பறவை என்னும் பொருளையே குறிக்கும் என உணரலாம். இதனை மேலும் தெளிவாக உறுதிப்படுத்த வேண்டுமெனில், இதே பொருளில் 'முது குருகு' என்னும் சொல்லாட்சி, கடைச் சங்க நூலாகிய ஐங்குறுநூற்றிலுள்ள - " சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர் வலைவர் தந்த கொழுமீன் வல்சிப் பறைதபு முதுகுருகு இருக்கும் துறைகெழு தொன்டி யன்னஇவன் கலனே' (180) என்னும் பாடலில் உள்ளமை காண்க. எனவே, முது நாரை - முது குருகு என்னும் இரட்டைப் பெயர்களைக் கொண்டும், இடைச்சங்க காலத்தும் குருகு என்னும் பெயரில் ஒரு நூல் இயற்றப்பட்டிருப்பதைக் கொண்டும், நாரை அல்ல்து குரு கு என்னும் பெயரால் நூல் இயற்றும் வழக்கம் பண்டு இருந்தது என்னும் கருத்து உணரக்கிடக்கிறது. அடுத்து, இந்த நூல்கள் எப்பொருள் பற்றியனவா யிருக்கலாம் எனக் காணவேண்டும். ஆராய்ச்சியாளரின் எண்ணத்திற்கு (சிந்தனைக்கு) ஈண்டு இரண்டு கருத்துக்களைத் தருவோம். ஒன்று: அகநானூற்றில் குறிப்பிட்ட 120 பாடல் களின் தொகுப்புக்குக் களிற்றியானை நிரை' என்னும் பெயர் தரப்பட்டிருப்பதை ஈண்டு ஒப்பு நோக்க வேண்டும். ஆண் யானைகளின் வரிசை போன்ற அமைப்புடைய பாடல்களின் தொகுப்பு களிற்றியானை நிரை என வழங்கப் பெறுகிறது. அதுபோலவே, நாரை - குருகின் நீண்டுயர்ந்த தோற்றம் போல் நீளமாக உள்ள பாடல்கள் நாரை - குருகு என்னும் பெயரால் வழங்கப்பட்டிருக்கலாம். ஓரளவு நீண்ட இசைப் பாடல்கள் நாரை - குருகு என்னும் பெயராலும், மிகவும் நீண்ட இசைப் பாடல்கள் முது நாரை - முது குருகு என்னும்